நாம் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பது மட்டுமின்றி அந்த பணத்தை பலமடங்கு பெருக்குவதற்கு சரியான வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையாக உள்ளது.
பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முறைகளில் முதலீடுகள் செய்தால் அதில் குறைந்த வருமானம் மட்டுமே கிடைக்கும் என்பதால் நிதி ஆலோசகர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆலோசனை கூறி வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது சில தவறுகள் செய்வதால் அதிக வருமானம் வருவது தடுக்கப்படுகிறது. இது குறித்து தற்போது பார்ப்போம்.
அடுத்த 2- 3 காலாண்டுகளில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 4 பங்குகளை வாங்கி போடுங்க..!

மியூச்சுவல் பண்ட் முதலீடு
முதலீட்டாளர்கள் ஒழுங்கற்ற முதலீட்டு நடத்தையை பின்பற்றுவதன் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை இழக்கின்றனர். சந்தையின் போக்கில் செல்வது முதலீட்டாளர்களால் செய்யப்படும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும்.

SIP முறையில் முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த ஆய்வில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் 20 ஆண்டுகளில் வெறும் 13.8% மட்டுமே வருமானம் பெற்றுள்ளனர். ஆனால் SIP முறையில் முதலீடு செய்தவர்களின் வருமானம் 15.2% என சிறப்பாக இருந்தது. இதேபோல், ஹைப்ரிட் ஃபண்டுகளை பொறுத்தவரை, 20 ஆண்டுகளில் முதலீட்டாளர் வருமானம் வெறும் 7.4% வருமானம் பெற்றுள்ளனர். ஆனால் SIP முறையில் முதலீடு செய்தவர்களின் வருமானம் 10.1% ஆகவும் இருந்தது. இதில் இருந்து SIP முறையில் முதலீடு செய்தவர்களின் வருமானம் அதிகம் என்பது தெரிய வருகிறது.

SIPகளை நிறுத்த கூடாது
மேலும், குறுகிய கால சந்தை திருத்தங்களை கவனத்தில் கொண்டு நீண்ட கால SIPகளை நிறுத்த கூடாது. அது SIP இன் நோக்கத்தையே கெடுத்து முதலீட்டாளர்களின் வருமானத்தை குறைக்கும்.

இடையில் வெளியேற கூடாது
ஒரு SIP முறை முதலீட்டை ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு தொடங்கிவிட்டால் அது முழுமையாமல் வெளியேறுவது, முதலீட்டாளர்களுக்கு குறைவான வருமானத்தை கொடுக்கும். முதலீட்டாளர்களுக்கான இந்த பிரச்சனைக்கான அடிப்படைத் தீர்வு சந்தையின் சுழற்சியை கண்டுகொள்ளாமல் இலக்கை அடையும் வரை முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதை தவிர்க்க வேண்டும்
சந்தை மாற்றத்தை மிகைப்படுத்தல், பேராசை மற்றும் பயம் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் தவிர்க்கவும். குறுகிய கால வருமானத்தில் அதிக கவனம் செலுத்தினால் நீண்ட கால ஆதாயங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஆகும்.
How mutual fund investors kill their chances of making more money
How mutual fund investors kill their chances of making more moneyமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செய்யும் தவறுகள்.. என்னென்ன செய்யக்கூடாது?