முகேஷ் அம்பானி: சொத்து பிரித்த பின்பு அடுத்த விஷயத்துக்கு அடம்பிடிக்கும் வாரிசுகள்..!

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி நிர்வாகம் செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒவ்வொரு வருடாந்திர கூட்டத்திலும் ரிலையன்ஸ் எப்போது ஐபிஓ வெளியிடும் என்பது தான். ஆனால் அதற்கான பதிலைக் கொடுக்கச் சொத்து மற்றும் வர்த்தகம் பிரித்தல் என்ற முக்கியமான விஷயம் இருக்கிறது.

இதனாலேயே முகேஷ் அம்பானி ஐபிஓ வெளியிடும் திட்டம் குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாமல் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் குறித்தே பேசி வந்தார். ஆனால் கடந்த மாதம் நடந்த வருடாந்திர கூட்டத்தில் முக்கியமான சில அறிவிப்புகள் வெளியானது.

இதன் மூலம் விரைவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை தனித்தனியாகப் பிரித்து ஐபிஓ வெளியிடும் செய்தி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க் இடத்தை கைப்பற்றப்போகும் முகேஷ் அம்பானி..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45 வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, தனது வாரிசுகளாக ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி ஆகியோருக்கு டெலிகாம் மற்றும் ரீடைல் பிரிவில் உயரிய நிர்வாகப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது என அறிவித்தார்.

 அனந்த் அம்பானி

அனந்த் அம்பானி

இதைத் தொடர்ந்து கடைசி மகனான அனந்த் அம்பானி நியூ எனர்ஜி வர்த்தகத்தையும் உருவாகி வருவதையும் ஆரம்பம் முதல் கவனித்து வருகிறார் என்றும், இப்பிரிவு வளர்ச்சிக்காக அனந்த் அம்பானி பெரும்பாலான நேரத்தைக் குஜராத் ஜாம்நகரிலேயே செலவிடுகிறார் என்றும் வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

முகேஷ் அம்பானி - நீதா அம்பானி
 

முகேஷ் அம்பானி – நீதா அம்பானி

இதன் மூலம் முகேஷ் அம்பானி – நீதா அம்பானி ஆகியோரின் 3 பிள்ளைகளில் யாருக்கு என்ன சொத்து என்பதை விளங்கியுள்ளது. ஒரு நிறுவனத்தைப் பொறுத்த வரையில் நிர்வாகம் மட்டும் பிரித்துக் கொடுத்தால் போதாது, மொத்த ஆளுமை அதாவது வருமானம், லாபம் என அனைத்தையும் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். இதற்கு அடிப்படையாகத் தனிக் கணக்குகளைக் கொண்ட நிறுவனமாக மாற்றி ஐபிஓ வெளியிடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.

 ஐபிஓ

ஐபிஓ

மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும முதலீட்டாளர்களும் சரி நிர்வாகமும் சரி வர்த்தகம் பெரிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில் தனித் தனி நிறுலனமாகப் பிரித்து ஐபிஓ வெளியிட்டால் மதிப்பீடு மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் அடையும் எனப் பல ஆண்டுகளாகப் பேசி வருகின்றனர். இந்த நிலையில் இதற்கான பணிகள் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ்

கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ்

கோட்டாக் இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் அடுத்த 2-3 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியம் 3 அல்லது 4 ஆக உடைந்து ஐபிஓ வெளியிடும் என்றும், 1-2 வருடத்தில் நிறுவனங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு வாரிசுகளுக்குத் தற்போதைய அளவை காட்டிலும் முக்கியமான பதவிகளை அளிக்கும் என் கணித்துள்ளது.

இப்போ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிலை என்ன..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance Industries break into multiple subsidiaries and list in BSE in 2 or 3 years

Reliance Industries break into multiple subsidiaries and list in BSE in 2 or 3 years முகேஷ் அம்பானி: சொத்து பிரித்த பின்பு அடுத்த விஷயத்துக்கு அடம்பிடிக்கும் வாரிசுகள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.