கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி அளிக்காத நிலையில், மாநிலத்தின் பிறபகுதிகளில் இருந்து ரயில், வாகனம் போன்றவை மூலம் ஏராளமான பாஜக தொண்டர்கள் தலைமை செயலகத்தை நோக்கி வந்தனர்.
அவர்களை போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை கொண்டு தடுத்தனர். மேலும் தலைமை செயலக சுற்றுவட்டாரத்தில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர், ராணிகஞ்ச் ரயில் நிலைய வளாகத்தில் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் பாஜகவினர் சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டதால் பதற்றம் நிலவியது.