சென்னை: பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட திடீர் ட்வீட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
சந்திரமுகி 2 படத்துக்காக கட்டுமஸ்த்தான உடல் தோற்றத்திற்கு மாறிய ராகவா லாரன்ஸ் அதன் புகைப்படங்களை ஷேர் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
அதே சமயம் தன்னுடைய அறக்கட்டளைக்கு இனி யாரும் டொனேஷன் கொடுக்க வேண்டாம் என்கிற கோரிக்கையும் திடீரென வைத்துள்ளார்.
வின் டீசல் போல மாறிய லாரன்ஸ்
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் வின் டீசல் போல முரட்டுத் தனமான உடம்புடன் அதிரடியாக தனது தோற்றத்தை சந்திரமுகி 2 படத்துக்காக மாற்றி உள்ளேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் அதன் புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

செம டிரான்ஸ்ஃபர்மேஷன்
இதுவரை ராகவா லாரன்ஸ் மாஸ்டர் சிக்ஸ் பேக் போல உடம்பை வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து எந்த படத்திலும் நடித்தது கிடையாது. ஆனால், முதல் முறையாக இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்துக்காக இப்படியொரு டிரான்ஸ்ஃபர்மேஷன் செய்து வருவதை அறிவித்துள்ளார். அதற்கு காரணமான சிவா மாஸ்டருக்கும் நன்றி கூறியுள்ளார்.

லாரன்ஸ் அறக்கட்டளை
நடிகர் லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை தனது லாரன்ஸ் அறக்கட்டளை சார்பாக செய்து வருகிறார். ஏகப்பட்ட குழந்தைகளை பெரிய ஆளாக்கி சமூகத்தில் நடமாட வைத்து வருகிறார்.

டொனேஷன் வேண்டாம்
இந்நிலையில், இனிமேல் தனது அறக்கட்டளைக்கு யாரும் டொனேஷன் பணம் அனுப்ப வேண்டாம் என அதிரடியாக ட்வீட் போட்டுள்ள ராகவா லாரன்ஸ், இறைவன் அருளால் தான் தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருவதாகவும், தனது சொந்த செலவிலேயே தனது பிள்ளைகளை பாதுகாக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

வடிவேலு பிறந்தநாள்
நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், சொந்த பணத்தில் நல்லது செய்ய நினைப்பது சூப்பரான விஷயம் அண்ணா என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.