ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் இலவச உணவு

புதுடெல்லி: அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

இந்திய ரயில்வே பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது. எனினும், இயற்கை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதில் எந்தக் காரணத்துக்காகவும் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்க வேண்டும் என்பது ரயில்வே விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இதன்படி பயணிகள் உணவை கேட்டுப் பெறலாம். சைவமா அசைவமா என்பதை பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம். இதுபோல சிற்றுண்டியா, சாப்பாடா என்பதையும் அவர்களே தேர்வு செய்யலாம்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) கடந்த 1999-ம்ஆண்டு நிறுவப்பட்டது. தரமான உணவை தயாரித்து வழங்க ஏதுவாக அவ்வப்போது கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐஆர்சிடிசி தனது சமையலறையை மேம்படுத்த உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.