ராணியாரின் இறப்பை கணித்தது போலவே: மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பை அறிவித்த ட்விட்டர் பயனர்!


பிரித்தானிய மகாராணியின் இறப்பை முன்பே கணித்த நபர்.


மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பு குறித்தும் எச்சரிக்கை.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8ம் திகதி உயிரிழப்பார் என்று முன்கூட்டியே ட்விட்டரில் தெரிவித்த இருந்த பயனர் ஒருவர், புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பு குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரலில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.

ராணியாரின் இறப்பை கணித்தது போலவே: மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பை அறிவித்த ட்விட்டர் பயனர்! | Man Who Correctly Predicted Queens In Twitter

ராணியின் மறைவிற்கு பிரித்தானியர்கள் மட்டுமின்றி பல்வேறு நாட்டு தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ட்விட்டரில் @logan_smith526 என்ற கணக்கை நடத்தி வந்த லோகன் ஸ்மித், கடந்த ஜூலை மாதம், பிரித்தானியாவின் நீண்ட காலம் பதவியில் இருக்கும் மகாராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர்  8, 2022  உயிரிழப்பார் என ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

லோகன் ஸ்மித் பதிவிட்டதை போலவே அரச குடும்ப உறுப்பினர்களால் சூழப்பட்ட நிலையில் பிரித்தானிய மகாராணி
கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர்  8) உயிரிழந்தார், மேலும் லோகன் குறிப்பிட்ட திகதியும் துரதிர்ஷ்டவசமாக உண்மையாகியது.

ராணியாரின் இறப்பை கணித்தது போலவே: மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பை அறிவித்த ட்விட்டர் பயனர்! | Man Who Correctly Predicted Queens In Twitter

அத்துடன் இவற்றில் மற்றொரு திடுக்கிடும் விஷயம் என்னவென்றால், ராணி குறித்து லோகன் ஸ்மித் பதிவிட்டு இருந்த அதே பதிவில், பிரித்தானியாவின் புதிய மன்னர் சார்லஸ் மார்ச் 28, 2026 அன்று இறந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து லோகன் ஸ்மித்தின் ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது என்று டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

ட்வீட் இணையத்தில் வைரலாக தொடங்கிய பிறகு லோகன் ஸ்மித் தனது கணக்கை தனிப்பட்ட தாக்கினார்.

ராணியாரின் இறப்பை கணித்தது போலவே: மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பை அறிவித்த ட்விட்டர் பயனர்! | Man Who Correctly Predicted Queens In Twitter

மேலும் அது ட்வீட்டரால் இடைநிறுத்தப்பட்டது.

வைரலான இந்த ட்வீட் நீக்கப்பட்டு இருந்தாலும், அது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

கூடுதல் செய்திகளுக்கு: வீட்டில் தனியாக இருந்த 28 வயது இளம்பெண் கொலை: சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்.

இந்த ஸ்கிரீன் சாட்டை கொண்டு  @zukosburnteye என்ற பயனர் Tik Tok வீடியோவை பதிவிட்டு இருந்தார், அதில்  “லோகனுக்கு RIP, பிரிட்டிஷ்காரர்கள் அவருக்காக வருகிறார்கள் என்று எனக்குத் தெரியும்.” என்று தெரிவித்து இருந்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.