முதலீடு செய்வதில் பல்வேறு வகை இருக்கும் நிலையில் எதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆய்வு செய்தே முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் லிக்யூட் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களை விட அதிக வருமானம் பெற்றுள்ளனர் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
லிக்விட் ஃபண்ட் என்றால் என்ன? அதில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
WFH முடிந்தது.. டிராபிக் உச்சம்..! இயல்பு நிலைக்கு திரும்பிய பெங்களூர்..!

லிக்யூட் ஃபண்ட்
லிக்யூட் ஃபண்ட் என்பது ஒரு குறுகிய காலகட்டத்துக்கு பணத்தை முதலீடு செய்யவேண்டும் என்பதும், முதலீட்டின் மதிப்பு குறையக் கூடாது ஆனால் அதே நேரத்தில் குறைந்த அளவிலான ரிட்டர்ன் இருந்தால் கூட பரவாயில்லை, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற முறை முதலீடு ஆகும். .

ஆகஸ்ட்டில் லிக்யுட் பண்ட்
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் லிக்யூட் ஃபண்ட்களின் நிகர வரவு ரூ. 50,095 கோடியாக இருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஜூலை மாதத்தில் லிக்யூட் ஃபண்ட்களின் நிகர ஓட்டம் எதிர்மறையாக இருந்தது என்பதும் ஜூலையில் -7692 கோடி ரூபாயாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிபுணர்களின் கருத்து
ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்புகள் மற்றும் நிலையான வைப்புத்தொகை ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் நிலையான வருமான பிரிவில் உள்ள கடன் நிதிகளை விட லிக்யூட் ஃபண்ட் நிதிகளை விரும்புவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி கொள்கைகள்
இந்திய ரிசர்வ் வங்கியின் சில கொள்கைகள் காரணமாக, மற்ற முதலீடுகளை விட லிக்யூட் ஃபண்ட் நிதிகளை பலர் விரும்புகிறார்கள். ரிசர்வ் வங்கி அதன் நிலைப்பாட்டை மாற்றியமைத்தால் மற்ற திட்டங்களில் தாக்கங்கள் இருக்கும் என்றும் ஆனால் லிக்யூட் ஃபண்ட்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் நிதி ஆலோசர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிக வட்டி
வட்டி விகிதம் மேல்நோக்கி செல்வதை கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை குறுகிய கால முதலீட்டு முறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்றும், பிக்சட் டெபாசிட் முதலீடு உள்ளிட்ட முதலீடுகளுடன் ஒப்பிடும்போது லிக்யூட் ஃபண்ட் முதலீட்டில் அதிக வட்டி விகிதத்தை பெற வாய்ப்புள்ளது என்று மார்னிங் ஸ்டார் இந்தியாவில் மூத்த ஆய்வாளர் மற்றும் ஆராய்ச்சி மேலாளர் கவிதா கூறியுள்ளார்.
Higher interest than Fixed Deposit: Is this why investors are parking more money in Liquid Funds?
Higher interest than Fixed Deposit: Is this why investors are parking more money in Liquid Funds? | லிக்யூட் ஃபண்டில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்குமா?