சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய கமல் மீண்டும் பிக் பாஸ் சீசன் 6ஐ தொகுத்து வழங்க வருகிறார்.
விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் சீசன் ஒளிபரப்பாகத் தொடங்கியதில் இருந்து 5 சீசன்களையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் வந்த நிலையில், தான் அவருடைய எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை என்கிற பேச்சும் அடிபட்டது.
பிக் பாஸ் ஹோஸ்ட்
பிக் பாஸ் தமிழ் சீசன் 1ல் இருந்து பிக் பாஸ் சீசன் 5 வரை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த கமல் பிக் பாஸ் சீசன் 6க்கும் தொகுப்பாளராக பங்கேற்க உள்ளார். அதற்கான புரமோவும் தற்போது வெளியாகி கமல் வருகையை உறுதி செய்தது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்த கமல் பாதியிலேயே அதை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்துக்காக
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் இறுதிகட்ட பணிகளுக்காக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொடர போவதில்லை என கமல் அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக புதிய ஹோஸ்டாக நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

6வது சீசனிலும்
இந்நிலையில், கமல்ஹாசன் பிக் பாஸ் 6வது சீசனை தொகுத்து வழங்க மாட்டார். அவர் சினிமாவில் மீண்டும் பிசியாகி விட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், 6வது சீசனையும் நானே தொகுத்து வழங்குவேன் என கமல் மீண்டும் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியது குறித்து ஏகப்பட்ட ட்ரோல்களும் கேள்விகளும் குவிந்து வருகின்றன.

இந்தியன் 2 பாதிக்காதா
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க ஆரம்பித்தால் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதிக்காதா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர். ஆனால், அதற்கும் கமல்ஹாசன் பக்காவான ஏற்பாட்டை செய்து விட்டுத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராம்சரண் படம்
இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் 15வது படம் இரண்டையும் இயக்கப் போவதாக அறிவித்த நிலையில், அதை பயன்படுத்திக் கொண்டு தான் கமல் மீண்டும் பிக் பாஸ் ஹோஸ்ட்டாக இந்த சீசனிலும் அதிரடி காட்டப் போகிறார் என்கின்றனர். பிக் பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் நாளில் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பை ஷங்கர் செய்வார் என்றும், மற்ற நாட்களில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் பங்கேற்பார் என்றும் கூறுகின்றனர்.

காரணமே வேறு
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி செய்வதற்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் ஏதோ சிக்கல் ஏற்பட்ட நிலையில், தான் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என வெறியேறினார் என்றும் அப்போதே கிசுகிசுக்கத் தொடங்கின. போட்டியாளர்கள் பற்றிய சர்ச்சைகளும் அரங்கேறியது தான் காரணமா? என்றும் ஏகப்பட்ட கேள்விகளை கமல்ஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்ததும் எழுப்பி வருகின்றனர்.