விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ஆட்டோவில், அதன் ஓட்டுநர், அவரது நண்பர்கள் என 5 பேர் சென்றுகொண்டிருந்தனர்.
கூனிமேடு பகுதியில் வேகமாக சென்ற அந்த ஆட்டோ, வாகனம் ஒன்றை முந்த முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராவிதமாக எதிரே அரசு பேருந்து வந்த நிலையில், ஆட்டோ நேருக்கு நேராக அப்பேருந்து மீது மோதியது.
இதில், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் பயணித்த ரவி என்பவர் உயிரிழந்தனர்.