தனது
வாழ்க்கையில்
வேகத்தை
விரும்பிய
ஹாலிவுட்
ஹீரோ
பால்
வால்க்கர்
சொன்னதெல்லாம்
அவர்
வாழ்க்கையில்
நடந்தது
ஆனால்
அது
சோக
நிகழ்வாக
இருந்தது.
ஃபாஸ்ட்
&
ஃபியூரியஸ்
மூலம்
உலகெங்கும்
ரசிகர்களுக்கு
பழக்கமான
ஹாலிவுட்
ஹீரோ
பால்
வில்லியம்
வால்கரின்
49
வது
பிறந்த
நாள்
இன்று.
தனது
40
வது
வயதில்
அவர்
விபத்தில்
மறைந்தார்.
தனது
தொண்டுள்ளம்
மூலம்
பலருக்கும்
உதவிய
பால்வால்கர்
கார்
விபத்தில்
சிக்கியபோது
உயிரிழந்தார்.
கார்
தீப்பிடித்திருக்காவிட்டால்
அவர்
பிழைத்திருப்பார்.
வேகம்
ஒரு
நாள்
என்னைக்கொல்லும்
வருந்தாதீர்கள்
அன்றே
சொன்ன
வால்கர்
வேகம்
ஒரு
நாள்
என்னை
கொன்றால்
அதற்காக
அழாதீர்கள்,
காரணம்
நான்
சந்தோஷமாக
இருப்பேன்
இது
ஹாலிவுட்
ஹீரோ
பால்வால்கர்
சொன்னது.
அவர்
சொன்னது
போலவே
வேகம்
அவர்
வாழ்க்கையை
வேகம்
இளம்
வயதிலேயே
முடித்து
வைத்தது.
உலகெங்கும்
உள்ள
அவரது
ரசிகர்கள்
அதிர்ச்சியில்
ஆழ்த்திவிட்டு
பால்வால்கர்
உயிரிழந்தபோது
அவரது
வயது
40
மட்டுமே.

2
வயதில்
மாடலிங்கில்
ஆரம்பித்த
பால்
வால்கர்
வாழ்க்கை
1973
ஆம்
ஆண்டு
செப்டம்பர்
மாதம்
13
ஆம்
தேதி
பிறந்த
பால்வால்கர்
மறைந்த
ஆண்டும்
2013.
கலிஃபோர்னியாவில்
பிறந்த
பால்வால்கர்
பள்ளி
படிப்பை
முடித்தப்பின்
கல்லூரி
படிப்பில்
மெரைன்
கடல்
உயிரியல்
சம்பந்தமான
படிப்பை
முடித்தார்.
அது
அவருக்கு
மிகவும்
பிடித்தமான
பாடம்.
தற்காப்பு
கலைகளில்
பிளாக்
பெல்ட்
பெற்றவர்
பால்வால்கர்.
அவருடை
தந்தை
ஒரு
குத்துச்
சண்டை
வீரர்,
தாத்தாவும்
குத்துச்
சண்டை
வீரர்.
பால்
வால்கர்
வால்க்கர்
குழந்தையாக
மாடலிங்
வாழ்க்கையைத்
தொடங்கினார்,
இரண்டு
வயதில்
பாம்பர்ஸ்
தொலைக்காட்சி
விளம்பரத்தில்
நடித்தார்.
அவர்
தொடர்ந்து
விளம்பரங்களில்
நடித்தார்.

2001
ஆம்
ஆண்டு
வாழ்க்கையை
புரட்டிப்போட்ட
ஃபாஸ்ட்&ஃபியூரியஸ்
1984
முதல்
தொலைக்காட்சி
தொடர்களில்
நடிக்க
தொடங்கினார்.
1996
வரை
தொலைக்காட்சியில்
நடித்தார்.
வெர்சிட்ய்
ப்ளூ,
ஜாய்
ரைடு
உள்ளிட்ட
சில
ஹாலிவுட்
படங்களில்
நடித்து
வந்தார்.
2001
ஆம்
ஆண்டு
அவரது
வாழ்க்கையை
திருப்பி
போட்டது.
2001
ஆம்
ஆண்டு
வின்
டீசலுடன்
இணைந்து
நடித்த
ஃபாஸ்ட்
அண்ட்
ஃபியூரியஸ்
படத்தில்
நடித்தார்.
இந்தப்படம்
மூலம்
உலக
அளவில்
பால்வால்கர்
புகழ்
பெற்றார்.
அதற்கு
இரண்டு
ஆண்டுகள்
கழித்து
2003
ல்
2
ஃபாஸ்ட்
2
ஃபியூரியஸ்
மூவி
வெளியானது.
அதுவும்
சக்கை
போடு
போட்டது.

7
சீரியஸ்கள்
புகழின்
உச்சிக்கு
சென்ற
பால்வால்கர்
பின்னர்
தொடர்ச்சியாக
2006,
2009,
2011,
2013
4
பாகங்களிலும்
வின்
டீசல்,
பால்வால்கர்
குழுவினர்
நடித்தனர்.
பால்வால்கர்
புகழின்
உச்சிக்கு
சென்றார்.
இதற்கு
அடுத்து
ஃபாஸ்ட்
&ஃபியூரியஸ்
7
2013
ஆம்
ஆண்டு
படபிடிப்பு
தொடங்கி
நடந்தது.
இந்த
நேரத்தில்
தான்
2013
நவம்பர்
30
அன்று
கார்
விபத்தில்
பால்
வால்கர்
உயிரிழந்தார்.
இது
உலக
அளவில்
அவரது
ரசிகர்களை
அதிர்ச்சியில்
ஆழ்த்தியது.
40
வயதில்
பால்
வால்கரின்
மரணம்
யாரும்
நம்ப
முடியாத
ஒன்றாக
இருந்தது.

படத்திற்கு
ஏற்பட்ட
சிக்கல்
சகோதரர்கள்
நடித்து
கொடுத்தனர்
பால்
வால்கர்
மறைந்ததால்
ஃபாஸ்ட்
&
ஃபியூரியஸ்
7
படத்தை
முடிப்பதில்
சிக்கல்
ஏற்பட்டது.
பால்
வால்கருக்கு
3
தம்பிகள்
உண்டு.
இதனால்
படக்குழு
அவரது
குடும்பத்தாருடன்
அமர்ந்து
பேசி
அவரது
உருவ
ஒற்றுமையுள்ள
இரண்டு
தம்பிகளை
படத்தில்
பயன்படுத்தினர்.
பால்வால்கர்
பார்ட்
மீண்டும்
திருத்தப்பட்டு
மீதியுள்ள
காட்சிகள்
அவரது
சகோதரர்கள்
கேலப்,
கோடி
வால்கரை
வைத்து
மீதி
பாகங்கள்
முடிக்கப்பட்டது.

கார்
பிரியர்
30
க்கும்
மேற்பட்ட
பழைய
நவீன
கார்களை
வைத்திருந்த
பால்வால்கர்
பால்வால்கர்
தனது
சம்பாத்தியத்தில்
பெரும்பகுதியை
பழைய
காலத்து
கார்கள்,
விலை
உயர்ந்த
கார்கள்
வாங்குவதில்
செலவழித்தார்.
அவருக்கு
சொந்தமான
கேரேஜில்
கோடிக்கணக்கான
டாலர்
மதிப்புள்ள
வின்யேஜ்
கார்கள்
மற்றும்
அதி
நவீன
கார்கள்
இருந்தன.
அதில்
ஃபாஸ்ட்
அண்ட்
ஃபியூரியஸில்
அவர்
ஓட்டிய
R34
Nissan
Skyline
GT-R
V-காரையும்
வாங்கி
வைத்திருந்தார்.
அவரது
மறைவுக்கு
பின்
2020
ஆம்
ஆண்டு
20
கார்கள்
அரிசோனா
கார்
கண்காட்சியில்
2.33
மில்லியன்
டாலருக்கு
(இந்திய
மதிப்பில்
18.4
கோடி
ரூபாய்)
விற்கப்பட்டது.

வாழ்க்கையின்
உண்மையை
உணர்ந்த
தத்துவ
பிரியர்
பால்
வால்கர்
தத்துவப்பிரியரான
பால்
வால்கர்
வாழ்க்கையைப்பற்றி
பல
விஷயங்களை
தத்துவங்களாக
சொல்லியிருக்கிறார்.
“வாழ்க்கையில்,
நல்லது,
கெட்டதாக
எது
இருந்தாலும்
சரி,
ஒவ்வொரு
காலையிலும்
எழுந்திருங்கள்,
உங்களுக்கு
ஏதேனும்
ஒன்று
உள்ளது”.
“
வாழ்க்கையை
அதன்
போக்கில்
விடுங்கள்.
“வாழ்க்கை
மிகவும்
குறுகியது.
யாரையாவது
காதலிப்பது
மிகப்பெரிய
சாபம்.”
“இது
அடுத்தவர்களுடன்
வேலை
செய்வதைப்
பற்றியது
அல்ல,
நான்
பெருமைப்படக்கூடிய
வேலையைச்
செய்வது
பற்றி”.
இதுபோல்
பல
விஷயங்களை
அவர்
பகிர்ந்துள்ளார்.

மக்களுக்காக
உதவ
சென்ற
போது
விபத்தில்
சிக்கிய
கார்
அவர்
சம்பாத்தியத்தில்
பல
நல்ல
காரியங்கள்
செய்துள்ளார்.
2011
ஹைதி
பேரிடரில்
தனது
குழுவினரை
அனுப்பி
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு
மருத்துவ,
நிவாரண
உதவிகள்
வழங்கினார்.
இதன்
மூலம்
தனது
நாட்டு
மக்களுக்கு
தன்னால்
இயன்ற
ஏதாவது
ஒன்றை
செய்ய
முடிந்தது
என
நம்பினார்.
2013
ஆம்
ஆண்டு
தான்
உயிரிழக்கும்
முன்
அவர்
நண்பருடன்
போர்ஷ்சே
காரில்
சென்றதும்
ஒரு
நல்ல
காரியத்துக்குத்தான்.
பால்
வால்கர்
சாரிட்டி
நடத்தும்
டைபூன்
புயல்
நிவாரண
நிகழ்ச்சிக்கு
தான்
சென்றுக்கொண்டிருந்தார்.
அந்த
நேரத்தில்
தான்
விபத்தில்
சிக்கி
உயிரிழந்தார்.

அவருக்கு
பிடித்த
காரே
அவரது
உயிரை
பறித்தது
பால்
வால்கருக்கு
மிகவும்
பிடித்த
கார்
போர்க்ஷே.
ரோல்ஸ்
ராய்ஸ்,
பென்ஸ்,
ஆடி,
பி.எம்.டபில்யூ
என
அவரிடம்
இல்லாத
கார்களே
இல்லை
எனலாம்
ஆனாலும்
எனக்கு
பிடித்தது
போர்ஷ்சே
கார்தான்
என
சொல்லியிருந்தார்.
துரதிர்ஸ்டவசமாக
அவர்
உயிரை
பறித்ததும்
விருப்பமான
போர்க்ஷே
கார்தான்
(2005
Porsche
Carrera
GT)
என்பது
சோகமான
ஒன்று.
அன்றைய
நாளில்
காரை
ஓட்டிய
அவரது
நண்பர்
ரோஜர்
ரோடாஸ்
ஓட்டினார்.
வழியில்
ஒரு
பெட்ரோல்
பங்கில்
பெட்ரோல்
நிரப்பினர்
அப்போது
எடுத்த
புகைப்படம்
தான்
அவரது
கடைசி
புகைப்படம்.

கார்
எரியாமல்
இருந்திருந்தால்
பிழைத்திருக்கலாம்
காரை
ஓட்டிய
நண்பர்
45
மைல்
வேகத்தில்
செல்லும்
சாலையில்
அதிவேகமாக
90
முதல்
100
மைல்
வேகத்தில்
ஓட்டினார்.
ஆனாலும்
ட்ரிஃப்ட்க்கு
பெயர்போன
அந்த
கார்
எந்த
பிரச்சினையும்
இல்லாத
கார்தான்.
ஆனால்
திடீரென
கட்டுப்பாட்டை
இழந்து
சுழன்று
ஒரு
மின்கம்பத்தின்
மீது
பக்கவாட்டில்
மோதி
மீண்டும்
சுற்றியபடி
பக்கத்தில்
இருந்த
மரத்தின்
மீது
பக்கவாட்டில்
மோதி
சின்னாபின்னமானது.
காரில்
காயங்களுடன்
இருவரும்
உயிருக்கு
போராடினர்.
மயக்க
நிலையில்
இருந்த
அவர்களால்
வெளியில்
வர
முடியவில்லை
இவ்வாறு
90
செகண்டுகள்
கழிந்த
நிலையில்
கார்
திடீரென
தீப்பற்றி
எரிந்தது.
இதில்
இருவரும்
தீயில்
கருகி
உயிரிழந்தனர்.
ஒருவேளை
கார்
எரியாமல்
இருந்திருந்தால்
பால்
வால்கர்
காயங்களுடன்
உயிர்
தப்பி
இருக்கலாம்.
கார்
டயர்
தேய்மானம்
காரணமாக
வெடித்ததே
விபத்துக்கு
காரணம்
என
பின்னர்
தெரிய
வந்தது.
ஒரு
அற்புதமான
மனித
நேய
கலைஞர்
40
வயதில்
கார்
விபத்தில்
உயிரிழந்தது
அனைவருக்கும்
பெரும்
இழப்பே.