2022-ம் ஆண்டு அரையாண்டு முடிவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் என்ற பெருமையை ஆந்திர பிரதேசம் பெற்றுள்ளது.
ஆந்திர பிரதேசம் மட்டும் மொத்தமாக 40,361 கோடி ரூபாய் முதலீட்டை இந்த ஆண்டின் அரையாண்டு இறுதிக்குள் பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு மொத்தமாக 1,71,285 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.
ஆந்திர பிரதேசம் & ஓடிசா
ஆந்திர பிரதேசம் மற்றும் ஓடிசா மாநிலங்கள் மட்டும் மொத்தமாக 45 சதவீதம் முதலீட்டை ஈர்த்து ஆச்சரியப்படுத்தியுள்ளன. ஓடிசா மாந்ல 36,828 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆனால் அதில் 20,949 கோடி ரூபாய் மட்டும் தற்போது வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா & குஜராத்
இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ள மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் மாநிலம் 17,620 கோடி ரூபாயுடன் 4வது இடத்தில் உள்ளது. இங்கு பட்டியலிடப்பட்ட தொகை தான் உண்மையாக வந்தடைந்துள்ள முதலீடுகள்.

தமிழ்நாடு
ஜூலை மாதம் வரையில் தமிழ்நாடு 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்களை பல்வேறு நிறுவனங்களுடன் போட்டுள்ளது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இன்னும் முழுமையாக வந்தடையவில்லை என்பதையே இந்த தரவுகள் கட்டுகின்றன. சில வாரங்களுக்கு முன்பு கூட தமிழ்நாடு அரசு தோல் துறையில் மட்டும் 2,250 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

தென் கொரியா பயணம்
தமிழ்நாட்டுக்கு தொழிற்துறைக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடங்கிய உயர் மட்டக் குழுவினர் ஐந்து நாள் பயணமாக விரைவில் தென் கொரியா செல்ல உள்ளனர். ஆனால் இது என்ன மாதிரியான முதலீடுகள் எந்த நிறுவனங்கள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

ஏன் ஒரு மாநிலத்துக்கு முதலீடுகள் முக்கியம்
ஒரு மாநிலத்தில் அதிகப்படியாக தொழில் தொடங்க முதலீடுகள் கிடைத்தால் தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். அந்த மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும்.

ஜிடிபி
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜிடிபி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.4 விழுக்காடு. ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு. தொல்பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு. இரண்டு நாட்களாக முன் வெளிவந்த மத்திய அரசு அறிவிப்பில், இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை தமிழகத்தில்தான் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Which state has attracted the most investments by the end of the first half of 2022? What is the status of Tamil Nadu?
Which state has attracted the most investments by the end of the first half of 2022? What is the status of Tamil Nadu?| 2022-ம் அரையாண்டு முடிவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநில எது? தமிழ்நாட்டின் நிலை என்ன?