ஓட்டவா: கனடாவை சேர்ந்த குடும்பம் ஒன்று உலகம் முழுக்க சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயணத்திற்கு பின் இருக்கும் சோக கதைதான் பலரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
செபாஸ்டியன் பெல்டியர் மற்றும் இடித்த லேமே ஆகியோரின் குடும்பம்தான் இந்த உலக சுற்றுலாவை மேற்கொண்டு உள்ளது. உலகம் முழுக்க இவர்கள் பல நாடுகளுக்கு தங்களின் காரிலேயே செல்லும் திட்டத்தில் உள்ளனர்.
விரைவில் இந்தியாவிற்கும் வரும் முடிவில் இவர்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் இவர்களின் மிகப்பெரிய உலக சுற்றுலா தொடங்கியது.
காரணம் என்ன?
இவர்களின் சுற்றுலாவிற்கு பின் மிகப்பெரிய காரணம் ஒன்று உள்ளது. 2018ல் இவர்கள் குடும்பத்தை சேர்ந்த மூத்த பெண் மியா என்பவருக்கு 30 வயது ஆனது. வயது 30ஐ தொட்ட சில நாட்களில் அவருக்கு பார்வை பறிபோனது. அவருக்கு retinitis pigmentosa என்ற கண் பாதிப்பு ஏற்பட்டது. இது மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றம் ஆகும். கண்களின் வெள்ளை விழிப்பகுதி மொத்தமாக இதனால் பாதிக்கப்படும். இந்த பாதிப்பிற்கு முழுமையாக சிகிச்சை இல்லை.
மாற்று
விழி மாற்று அறுவை சிகிச்சையை விட இதற்கு பெரிதாக வேறு சிகிச்சை இல்லை. அப்படியே விழி மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும், பலருக்கு அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடியாது. மியாவிற்கும் விழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மருத்துவர்கள்கூறியுள்ளனர் . இதனால் அவரின் பார்வை பறிபோய் உள்ளது. இதையடுத்துதான் அவர்களின் சகோதரர்கள் கோலியின், லாரன் இருவருக்கும் கண்களில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கும் சோதனை செய்துள்ளனர்.
சோதனை
இந்த சோதனையின் முடிவில் அவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யார் விட்ட சாபமோ அவர்களுக்கு 30 வயது கடந்ததும் இதே பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். அதாவது 30 வயது ஆனதும் இவர்களுக்கும் பார்வை பறிபோகும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதையடுத்தே அவர்களின் குடும்பம் மொத்தமாக உலகத்தை சுற்ற முடிவு செய்துள்ளனர். வீட்டில் உள்ள 3 குழந்தைகளுக்கும் பார்வை பறிபோகும் முன் இந்த பயணத்தை மேற்கொள்ள அவர்களின் குடும்பம் முடிவு செய்துள்ளது.
மார்ச்
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இவர்கள் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள். நமீபியா, சாம்பியா, தான்சானியா, துருக்கி, மங்கோலியா போன்ற நாடுகளுக்கு இதுவரை அவர்கள் சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தோனேசியாவிற்கு பயணம் செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்பின் ரஷ்யா, சீனா, இந்தியாவிற்கு வரும் முடிவில் உள்ளனர். 30 வயதிற்குள் பார்வை போகும் என்பதால் இவர்கள் குடும்பத்தோடு உலகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் இந்த பயணம் பலரிடையே நெகிழ்ச்சியை, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.