பிரிட்டனின் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் அங்கு தற்போது பணவீக்கம் என்பது 10% மேலாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 13% ஆக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில் பிரிட்டனின் வேலையின்மை விகிதம் 1974 முதல் பார்க்கும்போது, ஜூலை முதல் மூன்று மாதங்களில் 3.6% ஆக குறைந்துள்ளது. இது அதிக மக்கள் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உணவுப் பொருட்கள் விலை உயர்வு எதிரொலி.. ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 7% அதிகரிப்பு!

48 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சரிந்த வேலையின்மை விகிதம்.. என்ன காரணம்?
பிரிட்டனின் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் அங்கு தற்போது பணவீக்கம் என்பது 10% மேலாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 13% ஆக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில் பிரிட்டனின் வேலையின்மை விகிதம் 1974 முதல் பார்க்கும்போது, ஜூலை முதல் மூன்று மாதங்களில் 3.6% ஆக குறைந்துள்ளது. இது அதிக மக்கள் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேலை வளர்ச்சி விகிதம் சரிவு
இதனை பொருளாதார நிபுணர்கள் 3.8% இருக்கலாம் என கணித்திருந்தனர். மே – ஜூலை காலகட்டத்தில் வேலை வளர்ச்சி விகிதம் 40,000 ஆக அதிகரித்துள்ளது. இது பொருளாதார வல்லுனர்கள் கணித்த விகிதத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவு என தேசிய புள்ளியியல் தரவு தெரிவித்துள்ளது.

பொருளாதார செயலற்ற விகிதம்
இதே பொருளாதார செயலற்ற விகிதமானது – வேலையில் இல்லாத மற்றும் வேலை தேடாத மக்கள் தொகையின் பங்கை அளவிடுவது, இந்த காலாண்டில் 0.4% அதிகரித்து, 21.7% ஆக அதிகரித்துள்ளது. இது ஜனவரி 2017க்கு பிறகு அதிகமாகும்.

பேங்க் ஆப் இங்கிலாந்து கவலை
இது நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு சந்தையை விட்டு வெளியேறும் மாணவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களின் அதிகரிப்பால் இந்த மாற்றம் உந்தப்பட்டதாக ONS தெரிவித்துள்ளது.
வேலைகளை நிரப்புவதற்கு ஊழியர்கள் இல்லாததால், பணவீக்கம் அழுத்தம் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், தொழிலாளர் சந்தையில் செயலற்ற தன்மை அதிகரிப்பது குறித்து பேங்க் ஆப் இங்கிலாந்து கவலை எழுப்பியுள்ளது.

பணவீக்க உச்சம்
தொடர்ந்து பணவீக்க விகிதமானது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், வட்டி விகிதத்தினை தொடர்ந்து இங்கிலாந்து மத்திய வங்கி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீடானது 10.2% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளம்
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2 மாதத்திலேயே சம்பளம் 5.2% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே ஜுன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் வேலை வாய்ப்புகளும், இரண்டு வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டிகின்றன.
UK unemployment rate hits 48 year low
Britain’s unemployment rate fell at 3.6% in the three months to July, the lowest since 1974.