துடிப்பான யோசனை இருப்பதாக எண்ணி எதையாவது செய்து பெரும்பாலானோர் அதில் சிக்கிக்கொள்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் 27 வயது நபர் ஒருவர் தீராத வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் முடிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் உள்ள பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடந்திருக்கிறது.
கடந்த வாரம் புதன்கிழமையன்று (செப்.,7) 27 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவரை அணுகியிருக்கிறார். அங்கு அவரது வயிற்றை சோதனை செய்வதற்காக சில பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அந்த நபரின் வயிற்றில் ஏழரை இன்ச் அளவுள்ள டியோட்ரண்ட் பாட்டில் ஒன்று புதைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார்கள். இதனையடுத்து ஆபரேஷன் செய்துதான் அந்த பாட்டிலை வெளியே எடுக்க முடியும் என முடிவுக்கு வந்தவர்கள் 2 மணிநேர நீண்ட அறுவை சிகிச்சை செய்து பாட்டிலை வெளியே எடுத்ததோடு அவரது உணவுக்குழாயும் சீர் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயிற்றில் டியோட்ரண்ட் பாட்டில் இருந்ததால் நோயாளியின் குடற்பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவை விரைவில் மற்றுமொரு அறுவை சிகிச்சை செய்து தீர்வு காணப்படும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இருப்பினும் அந்த நபரின் வயிற்றுக்குள் எப்படி அந்த டியோட்ரண்ட் பாட்டில் போனது என்பது குறித்தும் விவரித்திருக்கிறார்கள். அதன்படி, கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பு மலக்குடல் வழியாக டியோட்ரண்ட் பாட்டிலை ஏதோ காரணத்திற்காக உட்செலுத்தியிருக்கிறார். அதன் பிறகே வயிற்று வலியால் அவதியுற்றிருக்கிறார்.
அதில் கடந்த சில நாட்களாக இயற்கை உபாதையை கழிக்கக் கூட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். அவரை குணப்படுத்துவதில் பெரும் சவாலை சந்தித்தோம். இருப்பினும் அவருக்கு கவனமாக சிகிச்சை அளித்தோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பேசியுள்ள நோயாளியின் குடும்பத்தார், “பொதுவாக அரசு மருத்துவமனையில் தாமதமாக சிகிச்சை அளிப்பார்கள் என கேள்வியுற்றிருப்போம். ஆனால் எங்களுக்கு திருப்தியாகவே இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
