உலகின் முதல் மொபைல் போன் குவால்காமின் அடுத்த நிலை ப்ராசஸரான ஸ்னாப்ட்ராகன் 4வது ஜெனெரேஷன் 1 பொருத்தப்பட்டு வெளியாகிறது. இதன் ஸ்டோரேஜ் வசதி 1டிபி வரை விரிவுபடுத்தி கொள்ளும் அளவிற்கு வசதிகள் உள்ளது. முந்தைய தயாரிப்புகளை விட 18.4% சிபியு செயல்பாடு, 6.9% ஜிபியு செயல்பாடு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முழு பேட்டரி சார்ஜில் உங்களால் 18 மணி நேரம் யூட்யூப் அல்லது 127மணி நேரம் மியூசிக் அல்லது 21.6 மணி நேரம் முகநூல் அல்லது 8.3 மணி நேரம் தொடர் கேமிங் என ஏதாவது ஒன்றை செய்து கொள்ளும் அளவு பேட்டரி திறன் மிக்கது. மேலும் ஸ்டைலான ஸ்லிம் லுக்கில் மொபைல் பாடி தயாரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கேமராவில் ஆட்டோ ஃபோக்கஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் வழங்க பட்டுள்ளன மற்றும் விலை நிலவரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ப்ராசஸர்:
ஸ்னாப்ட்ராகன் 4வது ஜெனெரேஷன் 1 ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்டோரேஜ்
4GB ரேம் + 64GB ரோம் மற்றும் 6GB + 128GB ரோம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
டிஸ்பிளே
6.58இன்ச் முழு HD டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
பேட்டரி
5000mAh பேட்டரி திறன் மற்றும் 18W சார்ஜிங்
கேமரா
50MP மெயின் + 2MP மேக்ரோ பின்பக்க கேமரா வசதி.8MP முன்பக்க கேமரா வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலை
13,999 ரூபாய் மற்றும் 15,499 என்ற விலையில் கிடைக்கலாம். மேலும் IQOO நிறுவனம் இந்திய ஸ்டேட் வங்கியோடு இணைந்து ஒரு சில சலுகைகளும் வழங்க உள்ளதாக தெரிகிறது. எனவே, ஒரு மொபைலுக்கு 2500 வரை சலுகை கிடைக்கலாம்.
நிறங்கள்
ஸ்டெல்லர் க்ரீன், மிஸ்டிக் நைட் கலர்ஸ்