NPS திட்டத்தில் புதிய மாற்றம்.. IRDAI அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

காப்பீட்டு துறையின் கட்டுப்பாட்டு ஆணையமான IRDAI அமைப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் இன்று முதல் தேசிய பென்ஷன் திட்ட வாடிக்கையாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையிலும் பணத்தை எளிதாக வித்டிரா செய்யவும் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது நீண்ட கால அடிப்படையில் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்யும் ஒரு திட்டம். இதில் முதலீடு செய்யவும் முடியும் அதேபோல் பென்ஷன்-ம் பெற முடியும் என்பதால் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இத்திட்டத்தில் தான் தற்போது முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

என்பிஎஸ் திட்டம்

என்பிஎஸ் திட்ட வாடிக்கையாளர்கள் இனி பென்ஷன் கார்பஸ் தொகையைப் பெரும் போது தனியார் எக்சிட் பார்ம் கொடுக்கத் தேவையில்லை, இதற்குப் பதிலாக proposal பார்ம்-ஐ எக்சிட் பார்ம் ஆகக் கருதப்படும், இதன் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களால் உடனடியாக Annuity திட்டங்களை வழங்க முடியும்.

செப்டம்பர் 13

செப்டம்பர் 13

இப்புதிய முறை செப்டம்பர் 13 முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது என இன்று வெளியிட்டு அறிக்கையில் இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையான IRDAI தெரிவித்துள்ளது.

இதோடு மற்றொரு தளர்வாக NPS திட்டத்திற்கு ஓய்வூதியதாரர்கள் தங்களது லைப் சர்டிபிகேட்-ஐ டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது.

NPS திட்ட ஓய்வூதியதாரர்கள்
 

NPS திட்ட ஓய்வூதியதாரர்கள்

தற்போது NPS திட்ட ஓய்வூதியதாரர்கள் திட்டத்தில் முதலீடு செய்த தொகையைத் திரும்பப்பெறும் போது exit form-ஐ ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் (PFRDA) சமர்ப்பிக்க வேண்டும், இதைத் தொடர்ந்து proposal form-ஐ தனியாகக் கொடுத்து Annuity திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தக் கடினமான முறையைத் தற்போது வெறும் exit form-ஐ வைத்து நிர்ணயம் செய்ய IRDAI அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

Annunity தொகை

Annunity தொகை

என்பிஎஸ் திட்டத்தில் பொதுவாக இத்திட்ட முடிவின் போது ஒருவர் Annunity-ஐ முடிவு செய்ய வேண்டும் அதாவது நீங்கள் ஓய்வு பெறும் போதும் பெரிய தொகை வித்டிரா செய்யும் அளவு. இதில் மொத்த முதலீட்டில் 60 சதவீதம் வரையில் வித்டிரா செய்ய முடியும், அப்படியானால் Annunity தொகை அளவு குறைந்தபட்சம் 40 சதவீதம்.

பென்ஷன் தொகை

பென்ஷன் தொகை

இந்த Annunity தொகையை அடிப்படையாக வைத்து தான் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் தொகை கொடுக்கப்படும். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஒருவர் மாதம் 10000 ரூபாயை 30 வருடத்திற்கு 60:40 முதலீட்டு விகிதத்துடன் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒய்வு அடைந்த பின்பு lumpsum தொகையாக 1,36,75,952 ரூபாயும், தேர்வு செய்யப்பட்ட 40 சதவீதம் annunity தொகையை வைத்து மாதம் 45,587 ரூபாய் பென்ஷன் தொகை பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

NPS pension rules: No need of proposal form for annuity, pensioners can submit life-certificate digitally

NPS pension rules eased from today. NPS pensioners No need of proposal form for annuity, NPS pensioners can submit a life-certificate digitally

Story first published: Tuesday, September 13, 2022, 22:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.