மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்- முதல் பாகம்’ செப்டம்பர் 30-ம் தேதி வெளியாவுள்ளது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர்
சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து படத்தின் வெளியீட்டையொட்டி படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.

சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா! @Karthi_Offl @actor_jayamravi @trishtrashers pic.twitter.com/6JW2s8cfK8
— Chiyaan Vikram (@chiyaan) September 13, 2022
இந்நிலையில் நடிகர் விக்ரம் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு தஞ்சை பெருவுடையார் கோவிலுக்குச் சென்று ஆசி பெறப்போவதாகப் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள விக்ரம் நடிகர் கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி ஆகியோரை அவர்களின் கதாபாத்திரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.