Tamil news Today live: ஒரே நேரத்தில் எஸ்.பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 115ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24
காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் எஸ்.பி.வேலுமணி, அவரது நண்பர் சந்திரசேகர் வீட்டிலும், சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை. சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு. தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
09:11 (IST) 13 Sep 2022
தீ விபத்தில் 8 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்

தெலங்கானா : செகந்திராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் – பிரதமர் மோடி

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி

09:08 (IST) 13 Sep 2022
ஓட்டலில் தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

08:19 (IST) 13 Sep 2022
எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்

08:14 (IST) 13 Sep 2022
சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு

வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.