அமெரிக்காவின் ஆகஸ்ட் மாத பணவீக்கம் கணிப்புகளை விடவும் அதிகமாகப் பதிவு செய்த காரணத்தால் அமெரிக்கப் பங்குச்சந்தை தொடர்ந்து ஆசியச் சந்தைகளும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
ஐரோப்பா, பிரிட்டன் அடுத்தடுத்து வட்டியை உயர்த்தி வரும் நிலையில் இந்த மாத இறுதியில் இந்தியாவும் 0.50 சதவீத வட்டியை உயர்த்த திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் அமெரிக்காவில் எரிபொருள் மீதான பணவீக்கம் குறைந்த போதும் ஆகஸ்ட் மாத பணவீக்கம் அதிகரித்துள்ளது அந்நாட்டின் அரசுக்கும், மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-க்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இந்த நிலையில் விரைவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமெரிக்கா வட்டியை உயர்த்தினால் இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பாக இருக்கும்.
தைவான்-க்கு ஆயுதம் விற்பனை செய்யும் அமெரிக்கா.. கடுப்பான சீனா..?

பணவீக்கம்
ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் 8 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் 8.3 சதவீதம் என அந்நாட்டு தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அமெரிக்கா முதல் ஆசியா, ஐரோப்பிய பங்குச்சந்தை வரையில் தொடர் சரிவு ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவின் ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் ஜூன் மாத உச்ச அளவான 9.1 சதவீதத்திற்கு அருகில் உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியிலும், பொருளாதார வல்லுனர்கள் மத்தியிலும் பெடரல் வங்கி விரைவில் வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கிறது.

நாணய கொள்கை கூட்டம்
இதன் மூலம் செப்டம்பர் 21 நாணய கொள்கை கூட்டத்தில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் 0.75 சதவீதம் வட்டியை உயர்த்தலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் நடந்தால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஏற்கனவே 2022ல் 6.5 சதவீதம் சரிந்துள்ள நிலையில் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.

ரூபாய் மதிப்பு
இதேவேளையில் குளோபல் பாண்ட் இண்டெக்ஸ், இந்தியாவில் முதலீட்டு அதிகரிப்பு, வர்த்தகப் பற்றாக்குறை மேம்பட்டு வருவதால், கச்சா எண்ணெய் விலையில் கிடைக்கும் தள்ளுபடி ஆகியவை ரூபாய் மதிப்பை பெரும் வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கும்.

அன்னிய முதலீடுகள்
ஆனால் இதேவேளையில் இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அன்னிய முதலீடுகள் அதிகமாகும் பட்சத்தில் ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல் விலைவாசியும் அதிகரிக்கும். இதனால் இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி தேக்கம் அடைய வாய்ப்புகள் உள்ளது.

ரெப்போ விகிதம்
விழாக்கால விற்பனையும், தள்ளுபடியும் சூடுபிடித்து வரும் நிலையிலும் ஆர்பிஐ இந்த மாத இறுதியில் ரெப்போ விகிதத்தைப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 0.50 சதவீதம் வரையில் வட்டியை உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது. இதனால் பண்டிகை கால விற்பனையில் பெரும் மாற்றம் ஏற்படும்.
USA fed Decision on monetary policy will have direct impact on indian Economy
USA fed Decision on monetary policy rate hike will have direct impact on indian Economy and indian rupee aganist USD.