இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.
மன்னரும் அவரது துணைவி கமீலா-வும் இதுவரை வசித்து வந்த கிளாரென்ஸ் ஹவுஸை விட்டு பக்கிங்காம் அரண்மனைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிளாரென்ஸ் ஹவுஸில் இவர்களுக்காக பணிபுரிந்த ஊழியர்களில் சுமார் 100 பேருக்கு இனி வேலையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எலிசபெத் உடல் வரும் திங்கட்கிழமை அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு, செப். 19 ம் தேதி இங்கிலாந்தில் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நூற்றுக்கணக்கான பணியாளர்களுக்கு வேலையிழப்புக்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள அதிகாரிகள், பணியாளர்கள் பலருக்கு வேலையில்லை என்பதால் அவர்களை வேலையை விட்டு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்பொழுது இல்லாவிட்டாலும் அடுத்த வாரம் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டி இருக்கும், அதற்கு பதிலாக முன்னரே தெரிவிப்பது அவர்களை தயார் படுத்த உதவும்.
மேலும், இந்த ஊழியர்கள் அடுத்த மூன்று மாதம் வரை பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.