Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. இந்த படத்தில் காட்டு மாடுகள் இருக்கு, வரிக்குதிரைகள் இருக்கு… அவைகளுக்கு இடையே ஒரு குதிரை மறைந்திருக்கிறது. அதை 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாக தேடும்போது உங்கள் மூளையைக் குழப்பும் விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறும்போது உங்களை தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் ஃபிரஷர் ஸ் லைவ தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு காட்டுப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துல காட்டு மாடுகள், வரிக்குதிரைகள் கூட்டாமாக இருக்கிறது. அவைகளுக்கு இடையே ஒரு குதிரை மறைந்திருக்கிறது. அந்த குதிரையை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் சூப்பர் பாஸ். ஏனென்றால், இந்த படத்தில் குதிரையைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலானது.
அனேகமாக, நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் குதிரையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். ஒருவேளை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக குதிரை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“