இனி இந்தியாவில் டோல்கேட் இருக்காது.. அதற்கு பதிலாக என்ன? மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவின் பல இடங்களில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என்பதும் இதன் மூலம் வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதும் தெரிந்ததே.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சுங்கச்சாவடிகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் எதிர்காலத்தில் சுங்கச்சாவடி இருக்காது என்றும் அதற்கு பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!

 தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்

தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்

19வது இந்திய அமெரிக்க பொருளாதார மாநாட்டை தொடக்கி வைத்த மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அதில் சிறப்புரையாற்றினார். அப்போது மத்திய போக்குவரத்து துறை ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் இனி நிறுத்த வேண்டிய நிலை இருக்காது என்றும், தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகன கட்டணம்

வாகன கட்டணம்

இந்த திட்டம் அமலுக்கு வந்துவிட்டால் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்களில் செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் வாகன கட்டணம் கணக்கிடப்பட்டு வாகன உரிமையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து தானாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாஸ்ட் டாக்
 

பாஸ்ட் டாக்

2018 – 19 ஆம் ஆண்டுகளில் சராசரியாக ஒரு சுங்கச்சாவடியை வாகனங்கள் கடந்து செல்ல 8 நிமிடங்கள் ஆனது என்றும் ஆனால் தற்போது பாஸ்ட் டாக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 45 வினாடிகள் மட்டுமே வாகனங்கள் காத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமதம்

தாமதம்

பாஸ்ட் டாக் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் காத்திருப்பு நேரம் குறைந்தாலும், குறிப்பிட்ட சில இடங்களில், குறிப்பாக நகரங்களுக்கு அருகில், பீக் ஹவர்ஸின்போது சில சுங்கச்சாவடிகள் தாமதம் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 சுங்கச்சாவடிகள் இருக்காது

சுங்கச்சாவடிகள் இருக்காது

எனவே தான் இதற்கு மாற்றாக தானியங்கி நம்பர் பிளேட்டில் கேமராக்கள் பொருத்தும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். இந்த திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றாலும் இந்த புதிய திட்டம் அறிமுகம் ஆனால் எதிர்காலத்தில் இந்தியாவில் சுங்கச்சாவடிகளே இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

வருமானம்

வருமானம்

இந்த நிலையில் தற்போது அரசுக்கு சொந்தமான சுங்கச்சாவடிகளில் மூலம் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கூறிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் முறை அமலுக்கு வந்தால் இந்த வருமானம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pilot project to replace toll plazas with automatic number plate recognition system on

Pilot project to replace toll plazas with automatic number plate recognition system on | இனி இந்தியாவில் டோல்கேட் இல்லை.. அதற்கு பதிலாக என்ன? மத்திய அமைச்சர் தகவல்

Story first published: Wednesday, September 14, 2022, 12:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.