அமெரிக்காவின் பணவீக்க தரவானது வெளியான நிலையில் கடந்த அமர்வில் பங்கு சந்தைகள் பலத்த ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டன. கமாடிட்டி சந்தையிலும் பலத்த ஏற்ற இறக்கம் இருந்தது. இதன் காரணமாக இன்று இந்திய சந்தையில் அதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு குறித்தான தரவானது ஆகஸ்ட் மாதத்தில் 8.3% ஆக வந்துள்ளது. இதனை நிபுணர்கள் 8.1% ஆக இருக்கலாம் என மதிப்பிட்டிருந்ததனர்.
இதனையடுத்து அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை நிச்சயம் அதிகரிக்கலாம் என நிபுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய பங்கு சந்தையின் தலையெழுத்து இன்று எப்படியிருக்கும்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்?

இந்திய சந்தையில் தாக்கம் இருக்கலாம்
இந்த வட்டி அதிகரிப்பானது 75 அடிப்படை புள்ளிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க மத்திய வங்கியின் இந்த முடிவால், அண்டை நாடுகளில் இருந்து முதலீடுகள் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் இதன் தாக்கம் பலமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் அதிகரிப்பு ஏன்?
கேஸ்-லின் விலையானது குறைந்து வருவது பணவீக்கத்தினை குறைக்க வழிவகுக்கலாம் என்றாலும், உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு, அதற்கான செலவுகள், வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து செலவினங்கள் என பலவும் உயர்ந்துள்ளது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்திருக்கிறதா?
பணவீக்க விகிதமானது தற்போது 8.5%ல் இருந்து குறைந்திருப்பதாக தோன்றிலும், தற்போதும் 8% மேலாகவே இருந்து வருகின்றது. எனினும் கடந்த ஜுன் மாதத்தில் 4 தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு 9.1% ஆக ஏற்றம் கண்டு இருந்தது. இது உணவு பொருட்கள் விலை, எரிபொருளில் இருக்கும் ஏற்ற இறக்கம் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் பணவீக்கம் இன்னும் உச்சத்திலேயே இருந்து வருகின்றது.

மத்திய வங்கி கூட்டம்
வரவிருக்கும் செப்டம்பர் 20 – 21 அன்று மத்திய வங்கி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கட்டாயம் அதிகரிப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 79% பேர் வட்டி அதிகரிப்பானது 75 அடிப்படை புள்ளிகள் இருக்கலாம் என கூறியுள்ளனர். மீதமிருக்கும் 21% பேர் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

டெக் பங்குகள் பலத்த சரிவு
இத்தகைய கணிப்புகள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க பங்கு சந்தைகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக டெக் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், டெஸ்லா, ஆல்பாஃபெட், அமேசான்.காம், மெட்டா உள்ளிட்ட பங்குகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
US inflation data may increase volatility in Indian stock markets
US inflation data is expected to have an impact on the Indian stock market and commodity market