இரவிலும் இனி ஹோம் டெலிவரி.. சென்னை, பெங்களுருக்கு வரும் புதிய சேவை..!

இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல புதிய சேவைகளைக் குவிக் காமர்ஸ் பிரிவில் இருக்கும் நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

இந்தியாவில் NIGHT LIFE குறித்த விவாதம் தற்போது பல மாநிலங்களில் அதிகரித்துள்ளதால் இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவில் முதல் நிறுவனமாக ஸ்விக்கி தனது இன்ஸ்டாமார்ட் சேவையின் டெலிவரி நேரத்தை விடியகாலை வரை நீட்டித்துள்ளது.

இது முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படும் நிலையில் விரைவில் பெரும்பாலான நிறுவனங்கள் இத்தகைய சேவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்

இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி தனது இன்ஸ்டாமார்ட் தளத்தின் டெலிவரி சேவையை இரவு முழுவதும் நீட்டிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதேபோல் இத்திட்டத்தை முதலில் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டும் சோதனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஸ்விக்கி வளர்ச்சி

ஸ்விக்கி வளர்ச்சி

ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் ஸ்விக்கி நிறுவனம் ஜூன் வரையிலான 12 மாதத்தில் 16 மடங்கு அதிக ஆர்டர்களை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் இருந்து பெற்றுள்ளது. இதேபோல் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்திற்குப் பெங்களூர், மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் இருந்து அதிக வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

25 நகரங்கள்
 

25 நகரங்கள்

இந்நிலையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஏற்கனவே காலை 7 மணி முதல் இரவு 1 மணி வரையில் நாட்டின் 25 நகரங்களில் சேவை அளிக்கும் நிலையில் தற்போது சில நகரங்களில் டெலிவரி சேவையைச் சுமார் 3 மணி வரையில் டெலிவரி சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சொன்னது போல் இந்த 3 மணி வரையிலான டெலிவரி சில பெரு நகரங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது.

5000 பொருட்கள்

5000 பொருட்கள்

இதுகுறித்து ஸ்விக்கி செய்தி தொடர்பாளர் கூறுகையில் நகராட்சி விதிமுறைகளுக்கு இணங்க ஸ்விக்கி கடைகள் மற்றும் டெலிவரி பார்ட்னர்-கள் உடன் இணைந்து சுமார் 5000 பொருட்களை (உணவு பொருட்கள், தின்பண்டங்கள், அவசர சேவை பொருட்கள்) காலை 3 மணி வரையில் டெலிவரி செய்யும் கட்டமைப்பை உருவாக்கி சில நகரங்களில் மட்டும் செயல்படுத்தி வருகிறோம்.

Dunzo, Zepto நிறுவனம்

Dunzo, Zepto நிறுவனம்

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் Y Combinator நிறுவன முதலீட்டில் இயங்கும் Dunzo சில நகரங்களில் 24X7 மணிநேரமும் டெலிவரி செய்யும் அமைப்பை உருவாக்கி வருகிறோம், இதேபோல் Zepto 10 நகரங்களில் 1 மணி வரையில் டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Swiggy Instamart home delivers upto 3 AM; Dunzo, Zepto, Blinkit entering into race

Swiggy Instamart grocery unit home delivers upto 3 AM extend its service hours in few cities. Dunzo, Zepto, Blinkit entering into race, Does this cause positive effect on India’s Night life

Story first published: Wednesday, September 14, 2022, 13:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.