சென்னை: சமீப காலமாக அந்த இங்கிலிஷ் இயக்குநர் இயக்குவதை விட நடிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தேவையில்லாமல் கடனில் சிக்கிக் கொண்டதை அடைக்க நடிக்க ஆரம்பித்த நிலையில், அதையே ஃபுல் டைம் ஜாபாக செய்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இயக்கத்தில் ரொம்ப வருஷம் கழித்து வெளியாக உள்ள அந்த படம் என்ன ஆகப் போகுதோ என்கிற பயம் மனசு ஃபுல்லா அவருக்கு இருக்காம்.
நடிகரை நம்பி
எந்தவொரு கதையும் இல்லாமல், படம் மொத்தத்தையும் அந்த நடிகரின் நடிப்பை மட்டுமே நம்பி எடுத்து இருக்கிறார் அந்த இங்கிலிஷ் இயக்குநர். அவரும் வெறித்தனமாக தனது நடிப்பை கொட்டித் தீர்த்து இருக்கிறார். ஆனால், நடிப்பைத் தாண்டி படத்தின் கதை என்ன தான் என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டால் சிக்கல் ஆகிவிடுமே என்கிற பயம் ரொம்பவே அந்த இயக்குநருக்கு கடைசி நேரத்தில் எழுந்துள்ளதாம்.

முதல் விமர்சனம்
படத்தை முதல் காட்சியே பார்த்து விட்டு விமர்சனம் கொடுப்பவர்களால் தான் ஒரு படத்தின் வெற்றி மற்றும் தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது என்பதை ரொம்பவே நம்புபவர் அந்த இயக்குநர். சமீப காலமாக ரசிகர்கள் ஆதரவு கொடுக்காத எந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட சொதப்பல்
இதற்கு முன்னதாக அவர் இயக்கிய படங்கள் எல்லாம் ஏகப்பட்ட சொதப்பல்களை அடைந்த நிலையில், இந்த பரிசோதனை முயற்சி வெற்றியை கொடுக்குமா? அல்லது கவிழ்த்து விட்டுவிடுமா என்கிற அச்சம் அவரை முழுவதும் ஆட்கொண்டுள்ளது. அதன் காரணமாகவே ஏகப்பட்ட இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்து வருகிறார்.

அந்த நடிகருடன் படம்
இந்த படம் ஹிட் அடித்தால் தான் அடுத்ததாக அந்த பெரிய நடிகருடன் படம் பண்ணும் வாய்ப்பு கன்ஃபார்ம் ஆகும் என நடிகர் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன நிலையில், எப்படியாவது இந்த படம் ஓடிட வேண்டும் என்கிற வேண்டுதலை நிறையவே செய்து வருகிறாராம் அந்த இயக்குநர்.

ரொம்ப லெந்த்
சமீப காலமாக ரொம்ப நேரம் ஓடக் கூடிய படங்களை எல்லாம் ரசிகர்கள் ரசித்து பார்க்காமல் ஃபிளாப் ஆக்கி வருகின்றனர். இதே நிலைமை அந்த படத்துக்கும் ஏற்பட்டால், அவ்வளவு தான் நிலைமை என்றும் யோசித்து வருகிறாராம். நடிகர், இசையமைப்பாளர் எல்லாம் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை கெடுத்து விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளாராம். என்ன ஆகப் போகுது என்பது விரைவில் தெரிந்து விடும்.