இன்றைக்கு பலரும் முகத்தின் அழகை மேம்படுத்த பல வழிகள் உள்ளன.
ஆனால் நாம் சிலர் செயற்கை முறைகளே பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் இது தற்காலிகம் தான்.
இருப்பினும் முகத்தின் அழகை ஒரே இரவில் மாற்றிவிட ஒரு சிறிய விதையே போதும்.
அது வேறொன்றும் இல்லை. அதுதான், எள்ளு.
எள்ளில் இருந்து செய்யப்படும் ஒரு சில குறிப்புகளை வைத்து முக அழகை பளபளவென பெற்று விடலாம். எவ்வாறு இதனை பெற வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
- முதலில் எள்ளை பொடியாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் மஞ்சள் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவி வந்தால் பருக்கள் காணாமல் போய் விடும். அல்லது நல்லெண்ணெய் 1 ஸ்பூன் எடுத்து கொண்டு அதனுடன் ஆப்பிள் சீடர் வினிகர் சிறிது சேர்த்து கொண்டு முகத்தில் தடவினால் முகப்பருக்களை ஒழித்து விடலாம்.
- அரிசி மாவுடன் நல்லெண்ணையை கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாகும். அத்துடன் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி மென்மையான சருமத்தை தரும்.
-
முதலில் பிரவுன் சுகருடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து யுகலிப்டஸ் எண்ணெய்யை சிறிது இதனுடன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி விடும்.