எஸ்.டி., பட்டியலில் நரிக்குறவர்மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான நரிக்குறவர், குருவிக்காரர் ஆகிய நாடோடி இனத்தை, எஸ்.டி., எனப்படும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதன் பின், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியதாவது:தமிழகத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் ஆகிய நாடோடி இனத்தவரை, எஸ்.டி., எனப்படும் மலைவாழ் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.வேட்டையாடுவதை தொழிலாக கொண்ட இந்த இனத்தவர் தற்போது, எம்.பி.சி., எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். இதனால், தங்களுக்கான பல சலுகைகளை அவர்கள் இழந்துள்ளனர். இவர்களை எஸ்.டி., பட்டியலில் சேர்க்க, பார்லி.,யின் குளிர்கால கூட்டத் தொடரில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை எஸ்.டி., பட்டியலில் சேர்க்கக் கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்தக் கோரிக்கை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

– நமது சிறப்பு நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.