காந்தி, இந்திராபோல்.. ஆர்எஸ்எஸ் கொலை மிரட்டல் கடிதம்! கனடா போலீசில் இயக்குநர் லீனா மணிமேகலை புகார்

ஒட்டாவா: கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கிய “காளி” என்ற ஆவண படத்தின் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தன்னை கொலை செய்வதற்கான மிரட்டல் கடிதத்தை ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டு உள்ளதாக இயக்குநர் லீனா மணிமேகலை அந்நாட்டு காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

பிரபல தமிழ் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமூகம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் சமூக அவலங்கள் குறித்த கருத்துக்களை பதவி செய்து வருபவர். ஈழப்போராட்டம், சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண் உரிமைகள் தொடர்பாக இவர் எழுதிய கவிதை மிகவும் பிரபலமானவை.

கவிதைகள் மட்டுமின்றி திரைப்படம், ஆவணப் படங்கள் திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். தேவதைகள், பறை, பலிபீடம் உள்ளிட்ட ஆவணப் படங்களையும், செங்கடல், மாடத்தி ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கி இருக்கிறார்.

காளி திரைப்படம்

இந்த நிலையில் அவர், காளி என்ற ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த ஆவணப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர்தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. “காளி” என்ற தலைப்புடன் அதற்கு பின்னால் பெண் கடவுள் கையில் திரிசூலத்தையும் மறு கையில் சிகரெட் பிடித்திருக்கிறது. அத்துடன் LGBT சமூகத்தின் வானவில் கொடியும் அதில் காட்டப்பட்டு இருக்கிறது.

 ட்விட்டரில் கடும் எதிர்ப்பு

ட்விட்டரில் கடும் எதிர்ப்பு

இந்த போஸ்டர் வெளியானதிலிருந்தே சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வலதுசாரிகள், பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்து மதத்தை அவமதித்த லீனா மணிமேகலையை கைது செய்ய வலியுறுத்தி #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேக்கை அவர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக வி.எச்.பி தலைவர் சாத்வி பிரக்யா உள்ளிட்டோரும் லீனா மணிமேகலையை கைது செய்ய வலியுறுத்தி இருக்கின்றனர்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

சர்ச்சைக்குரிய இந்த போஸ்டர் தொடர்பாக லீனா மணிமேகலை மீது உத்தரப்பிரதேச போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். டெல்லி காவல்துறையும் வழக்கு பதிந்துள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, போஸ்டரை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

 லீனா மணிமேகலை புகார்

லீனா மணிமேகலை புகார்

கடந்த ஜூலை மாதம் கிளம்பிய இந்த பிரச்சனை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இயக்குநர் லீனா மணிமேகலை ட்விட்டரில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆர்.எஸ்.எஸ். கனடாவின் டொராண்டோ நகரில் இந்த கொலை மிரட்டல் கடிதத்தை பரப்பி வருகிறது. எடொபிகோக் பகுதியை சேர்ந்தவர் இதை எனக்கு அனுப்பி வைத்தார்.” என்று 2 படங்களை பதிவிட்டு டொராண்டோ காவல்துறைக்கும் டேக் செய்துள்ளார்.

 ஆர்.எஸ்.எஸ் கடிதம்

ஆர்.எஸ்.எஸ் கடிதம்

ஆர்எஸ்எஸ் முத்திரையுடன் இருக்கும் அந்த கடிதத்தில், “வெறுக்கத்தக்க நடவடிக்கைக்காக லீனா மணிமேகலையை தண்டிக்க வேண்டும். மேற்கத்திய ஈடுபட்டால் இந்துத்துவ கொள்கையை அவர் இழிவுபடுத்தியுள்ளார். அவரது தினசரி நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் அவர் இந்துஸ்தானில் சாதாரணமாக நடமாடுகிறார். மரணம் குறித்து பயமில்லாதவர்களின் நடவடிக்கைகளால் அவர்களின் குடும்பம் பின்விளைவுகளை சந்திக்கும்.

 காந்தியைபோல் கொல்வோம்

காந்தியைபோல் கொல்வோம்

மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் கொல்லப்பட்ட தேதியை குறிப்பிட்டு “இப்படிதான் இந்துத்துவாவினர் பிரச்சனைகளை அழித்தனர். இதுபோல் செய்ய பல வழிகள் உள்ளன. உணவு, குளிர்பானங்களில் விஷம் கலக்கலாம். லீனா மணிமேகலை திரைப்பட விழாக்கள் போன்ற பொது இடங்களுக்கு வருவார். இந்துஸ்தான் மீது அத்துமீறும் அமெரிக்கா, கனடா குடிமக்களை புனித பூமியில் இருந்து அகற்ற வேண்டும்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.