பெங்களூரு : ”கால்வாய்கள் 1,800 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.பெங்களூரு விதான் சவுதாவில் நடக்கும் சட்டசபை கூட்டத்தில் நேற்று, காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ண பைரே கவுடா கேள்விக்கு பதிலளித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:யாருடைய நெருக்கடிக்கும் பணியாமல், பெங்களூரில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
பெங்களூரில் 850 கி.மீ., துார கால்வாய்கள் உள்ளன. இதில் 450 கி.மீ., கால்வாய்கள் சீரமைப்பு பாக்கி உள்ளது. கடந்த ஆண்டு கால்வாய் சீரமைப்புக்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.தற்போது மீண்டும் கூடுதலாக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் 1,800 கோடி ரூபாய் செலவில் கால்வாய்கள் சீரமைக்கப்படும். இரண்டு ஆண்டில் பணிகள் முடியும்.பெங்களூரில் எட்டு மண்டலங்கள் உள்ளன. இதில், இரண்டு மண்டலங்களில் மட்டுமே பிரச்னைகள் அதிகமாக உள்ளன. அதிலும் மகாதேவபுரா தொகுதியில் பிரச்னைகள் அதிகம். பெங்களூரில் இருந்து வெளியேறும் தண்ணீரில் 80 சதவீதம் இந்த தொகுதி வழியாக செல்கிறது. 69 ஏரிகள் உள்ளன. இதனால் பிரச்னை அதிகமாக உள்ளது. பெங்களூருக்கு களங்கம் ஏற்பட விடமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement