வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து கொச்சிக்கு 145 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்ப தயாரான நேரத்தில் இன்ஜீனில் தீ ஏற்பட்டதுடன், புகை கிளம்பியது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஓமனின் மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கேரளாவின் கொச்சினுக்கு கிளம்பியது. விமானத்தில் 4 குழந்தைகள், 6 ஊழியர்கள் உட்பட 145 பேர் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டிருந்த போது, 2வது இன்ஜீனில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டதுடன் புகை கிளம்பியது. இதனையடுத்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாற்று விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பாக, இந்திய விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement