கொள்ளிடம் பெண்ணுக்கு பன்றி காய்ச்சல்

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த மாசிலாமணி மனைவி வளர்மதி (56). கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட வளர்மதி, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குறையவில்லை. இந்நிலையில் நேற்று புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வளர்மதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனையில், பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து  சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மாங்கனாம்பட்டு கிராமத்துக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.