கோவை: கோவை காரமடையில் பெரியார் பெயரில் உணவகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையின் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
