மும்பை:
தெலுங்கு,
தமிழ்
படங்களில்
முன்னணி
நடிகையாக
கலக்கி
வந்தவர்
நடிகை
இலியானா.
கோலிவுட்,
டோலிவுட்டை
தொடர்ந்து
பாலிவுட்
பக்கம்
சென்ற
இலியானா,
தற்போது
இந்தி
படங்களில்
மட்டுமே
அதிக
கவனம்
செலுத்தி
வருகிறார்.
இந்நிலையில்,
இலியானா
முதன்முறையாக
வெப்
சீரிஸில்
நடிப்பதாக
தகவல்
வெளியாகியுள்ளது.
ஒல்லிக்குச்சி
இடையழகி
இலியானா
தெலுங்கில்
‘தேவதாசு’
படம்
மூலம்
ஹீரோயினாக
அறிமுகமான
இலியானா,
தமிழில்
‘கேடி’
திரைப்படம்
மூலம்
என்ட்ரி
கொடுத்தார்.
நல்ல
நெடுநெடுவென
தோற்றம்,
நீளமான
மூக்கு,
ஒல்லியான
இடுப்புமாக
இடையழகியாக
ரசிகர்களை
கிறக்கிய
இலியானா,
‘நண்பன்’
படத்தில்
விஜய்க்கு
ஜோடியாக
நடித்திருந்தார்.
இந்தப்
படத்தில்
விஜய்க்கு
இலியான
கொடுத்த
லிப்
லாக்
கிஸ்
ரசிகர்களை
சூடேற்றியது.

ஒரேடியாக
பாலிவுட்டில்
செட்டில்
நண்பன்
படத்தில்
விஜய்க்கு
இலியானா
கொடுத்த
லிப்லாக்,
கோலிவுட்டில்
நல்ல
வேலை
செய்யும்
என
எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்,
அவர்
தமிழ்,
தெலுங்கு
படங்களை
தவிர்த்துவிட்டு,
பாலிவுட்
பக்கம்
கரை
ஒதுங்கினார்.
அங்கும்
தனது
கிளாமரான
நடிப்பால்
இந்தி
ரசிகர்களின்
தூக்கத்தை
கலைத்த
இலியானா,
முன்னணி
நடிகையாக
வலம்
வரத்
தொடங்கினார்.
ஆனாலும்
அவர்
மீண்டும்
தமிழுக்கு
வருவார்
என
எதிர்பார்த்திருந்த
ரசிகர்களுக்கு
பெரிய
ஏமாற்றம்
தான்
கிடைத்தது.

வெப்
சீரிஸ்ஸில்
அறிமுகம்
ஓடிடி
தளங்களின்
வருகையால்
திரைப்படங்கள்
தவிர்த்து
வெப்
சீரிஸ்களும்
அதிகமாக
வெளியாகின்றன.
முன்னணி
நடிகையான
சமந்தா
‘தி
பேமிலி
மேன்’
வெப்
சிரீஸில்
நடித்து,
தற்போது
பான்
இந்தியா
ஸ்டாராக
ரவுண்டு
வரத்
தொடங்கிவிட்டார்.
தற்போதைய
சமந்தாவின்
மார்க்கெட்டை
பார்த்த
பல
முன்னணி
நடிகைகளும்
ஆச்சரியத்தில்
உள்ளனர்.
அதனால்,
இலியானாவும்
இப்போது
முதன்முறையாக
ஒரு
வெப்
சீரிஸில்
கமிட்
ஆகியுள்ளார்.
இலியானா
வெப்
சீரிஸில்
நடிக்க
முடிவெடுத்துள்ளது,
மற்ற
முன்னணி
நடிகைகளையும்
யோசிக்க
வைத்துள்ளது.

ஹீரோயினுக்கு
முக்கியத்துவம்
கேரக்டர்
இலியானா
நடிக்கவுள்ள
வெப்
சீரிஸை
பிபிசி
ஸ்டுடியோஸும்
அப்ளாஸ்
என்டர்டைன்மென்ட்
நிறுவனமும்
இணைந்து
தயாரிக்கிறது.
மேலும்,
பெண்களை
மையப்படுத்தி
உருவாகும்
இந்த
வெப்
சீரிஸ்ஸை,
‘தி
பேம்
கேம்’
வெப்சீரிஸ்
இயக்குநர்
கரிஷ்மா
கோலி
இயக்கவுள்ளதாகக்
கூறப்படுகிறது.
இன்னும்
தலைப்பு
வைக்கப்படாத
இந்த
வெப்சீரிஸ்.
வித்தியாசமான
ஜானரில்
உருவாகவுள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.
இந்த
வெப்
சீரிஸ்
குறித்தும்,
இதில்
நடிப்பவர்கள்
பற்றியும்
விரைவில்
அதிகாரப்பூர்வமாக
அறிவிப்பு
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.