சாராயம் ஒழிப்பு அமைச்சர் கறார்| Dinamalar

பெங்களூரு : ”கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” கலால் துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.கர்நாடக சட்டசபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் பசவனகவுடா தத்தல் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் கோபாலய்யா கூறியதாவது:மாநிலத்தின் எந்த பகுதியாக இருந்தாலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைவில் மற்றொரு கூட்டம் நடத்தி, மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.