சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மத மாற்றம் குறித்த புகார்கள் எழுந்த நிலையில், அப்பள்ளியில் விசாரணை நடத்திய மாநில குழந்தைகள் ஆணையமும் சிறுபான்மையினர் நல ஆணையமும் முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்துள்ளன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மீது விதி மீறல்கள் தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், மாநில சிறுபான்மையினர் நல் ஆணையத்தினர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த வாரம் மாநில குழந்தைகள் ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, அடுகடுக்கடுக்கான சர்ச்சையான பல்வேறு சம்பவங்கள் நடந்தபடி உள்ளன.
அந்த பள்ளியில் மத மாற்றம் செயப்படுவதாகவும், மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் பல்வேறு விதி மீறல்கள் நடைபெறுவதாக மாநிலக் குழந்தைகள் ஆணையம் முன் வைத்தது. இந்த விசாரணை தொடர்பாக மாநில குழந்தைகள் ஆணையம் 85 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அளித்தனர்.
அதே போல, தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு ஒரு பரிந்துரைக் கடிததை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், மாநில சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் நேரடியாக தனியார் பள்ளிக்கு சென்று பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இந்த பள்ளியில் மதமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மாநில குழந்தைகள் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது. மாநில சம்பவத்தின் பின்னணியில் ஒரு பெரிய சதி இருக்கிறது மாநில குழந்தைகள் ஆணையம் வைத்த அனைத்து குற்றாச்சாட்டுகளும் தவறானவை. இதன் பின்னணியில் ஒரு பெரிய சதி இருப்பதாகவும் தெரிவித்டி
மேலும், யாரோ ஒரு சிலர் மாநில குழந்தைகள் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை இயக்குவதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக மாநில குழந்தைகள் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக ஒரு விசாரணை அறிக்கையை முதல்வரிடம் வழங்குவோ என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
இதனிடையே, மாநில குழந்தைகள் ஆணையம் அந்தப் பள்ளியில் 9 குழந்தைகளிடம் எழுத்துப் பூர்வமாக புகார் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”