டிசிஎஸ், இன்ஃபோசிஸ்-க்கு சிவப்பு கொடி.. விப்ரோவுக்கு பச்சை கொடி.. கோல்ட் மேன் அதிரடி!

சமீப காலமாகவே சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்திய ஐடி துறையானது பலத்த சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் மதிப்பினை ” Sell ” என டவுன் கிரேட் செய்துள்ளது.

நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஐடி நிறுவனங்களின் வருவாய் அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வர்த்தகத்தில் இறங்கும் டாடா குழுமம்.. அடடே இது நல்லா இருக்கே..!

ஐடி பங்கில் தாக்கம் இருக்கலாம்

ஐடி பங்கில் தாக்கம் இருக்கலாம்

இதற்கு மத்தியில் தான் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது. இது மேற்கண்ட ஐடி நிறுவன பங்குகளின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. குறிப்பாக ஐடி செலவினங்களை குறைக்க இது வழிவகுக்கலாம். இதன் காரணமாக இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தள்ளி போகலாம்.

 

எபிட்டா மார்ஜின்

எபிட்டா மார்ஜின்

சர்வதேச நிறுவனங்களின் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய நிறுவனங்களின் வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களின் சம்பளம், வேரியபிள் பே, புதிய பணியமர்த்தல் என பலவற்றிலும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பாவின் நிலை?
 

அமெரிக்கா, ஐரோப்பாவின் நிலை?

இதற்கிடையில் தான் ஐடி நிறுவனங்களின் தரக்குறியீட்டினை குறைத்துள்ளது கோல்ட்மேன் நிறுவனம். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தற்போது தான் வளர்ச்சிக்கு திரும்பிக் கொண்டுள்ளன. தற்போது அதனை மேலும் பின்னுக்கு தள்ளும் விதமாக பொருளாதார மந்த நிலையும் இருந்து வருகின்றது.

விப்ரோ

விப்ரோ

எனினும் கோல்ட்மேன் விப்ரோவை விற்பனை என்பதில் இருந்து வாங்க என மேம்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் ஆர்டர் புத்தகத்தில் சில ஆர்டர்கள் இருந்து வரும் நிலையில், வளர்ச்சி மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இதன் தரத்தினை மட்டும் மேம்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Goldman Sachs has downgraded TCS, Infosys to sell and Wipro to buy

Goldman Sachs downgraded Tata Consultancy Services and Infosys to Sell”, while Wipro has upgraded its stock to Buy.

Story first published: Wednesday, September 14, 2022, 16:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.