பெங்களூரு : மைசூரு தசரா விழா, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடக்கிறது. மாநில கல்வி மற்றும் எழுத்தறிவு துறை காலண்டர்படி, அக்டோபர் 3 முதல் 16ம் தேதி வரை தசரா விடுமுறை அளிக்கப்படும்.ஆனால், மங்களூரு நகர தெற்கு எம்.எல்.ஏ., வேதவியாச காமத் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 10ம் தேதி வரையும்; மற்ற மாவட்டங்களுக்கு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும்.
மறுநாள் அக்., 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை தசரா விடுமுறை அளிக்க, கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் நாகேஷ் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, எம்.எல்.ஏ., வேதவியாச காமத் கூறியதாவது:நவராத்திரி செப்டம்பர் 26ல் தொடங்குகிறது. அத்துடன், மங்களூரு தசரா, சாரதா மஹோற்சவ தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் மங்களா தேவி கோவில் நுாற்றாண்டு விழாவும் இந்தாண்டு வருவதால், அனைத்து திருவிழாவுக்கும் ஒன்றாக விடுமுறை அளிக்க, அமைச்சர் நாகேஷிடம் கோரிக்கை விடுத்தேன். அவரும் பண்டிகை காலத்திலேயே விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement