தமிழகத்தில் செயல்படாத கட்சிகள் என ’22 கட்சிகள்’ நீக்கம் – இந்திய தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 22 கட்சிகள் செயல்படாத கட்சிகள் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 253 மாநில கட்சிகளை செயல்படாதவை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும், 86 கட்சிகள் தற்போது இல்லை எனக் கூறி பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் போட்டியிடவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை என இந்திய தேர்தல் ஆணையம் அதன் அறிக்கையில் கூறியுள்ளது. அதேபோல் 6 ஆண்டுகள் கட்சிகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
image
அதன்படி தமிழகத்தை பொறுத்தவரையில் 7 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அவை தற்போது இல்லை என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி,
1. கொங்குநாடு ஜனநாயக கட்சி
2. மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம்
3. எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி
4. தேசபக்தி கட்சி
5. புதிய நீதி கட்சி
6. தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம்
7. தமிழர் கழகம்

உள்ளிட்ட 7 கட்சிகள் தற்போது இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதேபோல் செயல்படாத கட்சிகள் என தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகளின் பெயர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
1. அனைத்திந்திய ஆதித்தனார் கட்சி
2. அகில இந்திய சிவில் உரிமைகள் பாதுகாப்பு கட்சி
3. அனைத்திந்திய சிங்காரவேலர் கட்சி.
4. அனைத்திந்திய தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம்.
5. அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி
6. கிறிஸ்டின் முன்னேற்ற கழகம்.
7. தேசிய பாதுகாப்புக் கட்சி
8. லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்.
9. ஹிந்துஸ்தான் தேசிய கட்சி
10. காமராஜர் ஆதித்தனார் கழகம்
11. கொங்கு நாடு முன்னேற்ற கழகம்
12. லெனின் கம்யூனிஸ்ட் பார்ட்டி
13. மாநில கொங்கு பேரவை
14. மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம்
15. நமது திராவிட இயக்கம்
16. நேஷனல் வெல்ஃபேர் கட்சி ( தேசிய நலக் கட்சி)
17. சக்தி பாரத தேசம்
18. சமூக சமத்துவ பாதை
19. தமிழ் தேசியக் கட்சி.
20. தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம்.
21. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
22. தமிழர் பார்ட்டி
உள்ளிட்ட 22 கட்சிகள் செயல்படாத கட்சிகள் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
– நிரஞ்சன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.