தேசிய சினிமா தினம் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தேசிய சினிமா தினத்தையொட்டி, நாடு முழுவதும் மால்களில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் திரைகளில் 75 ரூபாய் கட்டணத்தில் புதிய திரைப்படங்களைத் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான தேதி செப்டம்பர் 16 என்று முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 23 ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.