நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம்: தமிழக அரசு உத்தரவு

Tamil Nadu News: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

7.5 கோடி அரசு நிதியைப் பயன்படுத்தி நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்றவேண்டும் என்று வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் தெரிவித்தார். ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட மாநிலங்களவையில் கலந்துரையாடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பெரியபாளையம் கிராமங்களுக்கு அருகில் அமைந்துள்ள 125.86.5 ஹெக்டேர் நிலம், தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாக மாறவிருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி, தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ஆகியோரின் முன்மொழிவை கவனமாக ஆய்வு செய்து, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் இப்பகுதியை ‘நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்’ என அறிவிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

வனவிலங்குகள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக, திருப்பூரில் சுற்றுச்சூழல், விலங்கினங்கள், தாவரங்கள், இயற்கை மற்றும் புவியியல் போதுமான அளவில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயத்தை திருப்பூர் மாவட்டம் நஞ்சராயனில் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, தனது நன்றி தெரிவித்ததோடு, பார்வையாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் நேரம் இது”, என்று குறிப்பிட்டார்.

அவர் நிலப்பரப்பின் வீடியோவை ட்வீட் செய்துள்ளார், மேலும் இப்பகுதியில் புலம்பெயர்ந்த பறவைகள் உட்பட 130 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வருகைத்தருகிறது என்றும் கூறினார்.

2021ஆம் ஆண்டு டிசம்பரில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, விழுப்புரம் அருகே அமைந்துள்ள கழுவேலி சதுப்பு நிலத்தை ‘கழுவேலி பறவைகள் சரணாலயம்’ என்று அறிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.