பெங்களூரு : ”நீர்ப்பாசன திட்டங்களை முடிக்க, 1.02 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி தேவைப்படும்,” என நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், சட்டசபையில் தெரிவித்தார்.கர்நாடக சட்டசபை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் நரேந்திரா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் கூறியதாவது:எங்கள் துறைக்கு, 18 முதல், 19 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
ஆனால் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற, 1.02 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. கிடைக்கும் நிதியுதவியை கொண்டு, படிப்படியாக பணிகள் நடத்தப்படுகின்றன. பாரபட்சம் பார்க்கவில்லை.பத்ரா மேலணை திட்டத்தின் கீழ், போசகெரே கிராமம் அருகில், வேதாவதி ஆற்றுக்கு பாலம் மற்றும் தடுப்பணை கட்ட, பட்ஜெட்டில் 25 கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி வழங்கப்படவில்லை. இருப்புள்ள தொகையில் பணிகளை நடத்துகிறோம்.கொள்ளேகாலின், குண்டால் அணை 1980ல் கட்டப்பட்டது. நான்கு முறை மட்டுமே நிரம்பியது. கால்வாய்களை பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 100 ஏக்கர் பகுதிக்கு, நீர்ப்பாசன வசதி செய்யப்படும். இந்த திட்டத்துக்கு நடப்பாண்டு, 11.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement