சென்னை:
சிவகார்த்தியேன்
தற்போது
அனுதீப்
இயக்கத்தில்
‘பிரின்ஸ்’
படத்தில்
நடித்து
வருகிறார்.
சிவகார்த்திகேயனின்
பிரின்ஸ்
திரைப்படம்
தீபாவளிக்கு
வெளியாகும்
என
தகவல்
வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,
அவர்
நடித்துள்ள
‘அயலான்’
படத்தின்
ரிலீஸ்
பற்றியும்
புதிய
தகவல்கள்
கிடைத்துள்ளன.
சயின்ஸ்
பிக்சனில்
உருவாகும்
அயலான்
2015ல்
வெளியான
‘இன்று
நேற்று
நாளை’
படத்தின்
மூலம்
இயக்குநராக
அறிமுகமானவர்
ரவிக்குமார்.
விஷ்ணு
விஷால்,
கருணாகரன்
நடித்த
இந்தப்
படம்
டைம்
டிராவல்
பின்னணியில்
அட்டகாசமான
திரைக்கதையோடு
பிரமாதமாக
உருவாகியிருந்தது.
ரசிகர்களிடமும்
சினிமா
விமர்சகர்களிடமும்
மிகப்பெரிய
வரவேற்பு
கிடைத்ததை
அடுத்து,
சிவகார்த்திகேயன்
நடிப்பில்
‘அயலான்’
படத்தை
இயக்க
முடிவெடுத்தார்
ரவிக்குமார்.
மேலும்,
இந்தப்
படம்
சயின்ஸ்
பிக்சன்
ஜானரில்
உருவாகும்
எனவும்
அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட்
காரணமாக
பாதியில்
நின்ற
சூட்டிங்
சிவகார்த்திகேயனுடன்
ரகுல்
ப்ரீத்
சிங்,
யோகி
பாபு,
கருணாகரன்
என
பலரும்
நடிக்க
ஒப்பந்தமான
நிலையில்,
ஏஆர்
ரஹ்மான்
இசையமைப்பாளராக
கமிட்
ஆனார்.
2018ல்
தொடங்கப்பட்ட
இந்தப்
படத்தில்
சிவகார்த்திகேயன்
3
பாத்திரங்களில்
நடித்து
வருவதாகக்
கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின்
நெருங்கிய
நண்பரான
ராஜா
தயாரிப்பில்
பிரம்மாண்டமாக
உருவாகும்
என
சொல்லப்பட்ட
அயாலான்,
பட்ஜெட்
பிரச்னை
காரணமாக
பாதியிலேயே
நின்று
போனது.

அயலானுக்குப்
பிறகு
5
படங்கள்
ரிலீஸ்
பட்ஜெட்
காரணமாக
பாதியில்
நின்றுபோன
‘அயலான்’
படத்தை,
கேஜிஆர்
நிறுவனம்
கைப்பற்றியது.
இதனையடுத்து
மீண்டும்
படப்பிடிப்பை
வேகப்படுத்திய
அயலான்
டீம்,
கடந்தாண்டில்
மொத்த
ஷூட்டிங்கையும்
முடித்தது.
இன்னொரு
பக்கம்
ஏஆர்
ரஹ்மான்
இசையில்,
ஃபர்ஸ்ட்
சிங்கிளும்
வெளியாகி
தூள்
கிளப்பியது.
இதனிடையே
அயலான்
படம்
தொடங்கப்பட்ட
பிறகு
சிவகார்த்திகேயன்
நடித்த
5
படங்கள்
வெளியாகிவிட்டன.
ஆனாலும்,
அயலான்
இன்னும்
வெளியாகவில்லை.

அடுத்தாண்டு
தான்
வெளியாகுமா?
அயலான்
படத்தில்
சிவகார்த்திகேயன்
ஏலியன்ஸாக
நடிப்பதாகவும்
சொல்லப்படுகிறது.
மேலும்,
இது
சயின்ஸ்
பிக்சன்
படம்
என்பதால்,
கிராஃபிக்ஸ்
பணிகளும்
நீண்ட
நாட்களாக
நடைபெற்று
வந்தன.
இதனிடையே
சிவகார்த்திகேயனும்
அயலான்
பட
தயாரிப்பாளரும்
சந்தித்துக்கொண்டதாக
கூறப்படுகிறது.
இந்தாண்டு
சிவகார்த்திகேயன்
நடிப்பில்
ஏற்கனவே
டான்
படம்
வெளியானதோடு,
அடுத்து
பிரின்ஸ்
படமும்
தீபாவளிக்கு
வெளியாகிறது.
இதனால்,
அயலான்
படத்தை
அடுத்தாண்டு
வெளியிடலாம்
என
சிவகார்த்திகேயன்
முடிவெடுத்துள்ளாதாக
தகவல்
வெளியாகியுள்ளது.