
பரோல் படத்தில் அண்ணன், தம்பி மோதல்
டிரிப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரோல். ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜ்குமார் அமல் இசை அமைத்துள்ளார், மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா கூறியதாவது: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கதை இருக்கும். ஆனால் ஒரு குடும்பத்திற்குப் பின்னால் உள்ள சொல்லப்படாத, சொல்லமுடியாத ஒரு கதைதான் இது. தாய் இறந்த காரணத்தினால் தனக்கு பிடிக்காத, கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அண்ணனை பரோலில் எடுக்கிறான் தம்பி. அவனுக்கும் அவன் அண்ணனுக்கும் உள்ள பிரச்சனையும், அதைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களுமே இப்படம்.
இது குடும்ப பின்னணியில் நடக்கும் எமோஷனல் கதை ஆனால் வலுவான ஆக்சனும் பரப்பான திரைக்கதையும் உள்ளது. மிக அழுத்தமான ஒரு ஆக்சன் படமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் படமாகவும் இருக்கும் . தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான படைப்பாகவும் இருக்கும். என்கிறார் இயக்குனர் துவாரக் ராஜா.