பலத்த சரிவுக்கு பிறகு தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. இன்றும் குறையுமா?

தங்கம் விலையானது கடந்த அமர்விலேயே 1% மேலாக சர்வதேச சந்தையில் சரிந்த நிலையில், இன்றும் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பணவீக்க தரவினை அடுத்து மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை நிச்சயம் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலையில் தொடரும் சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

 பணவீக்க தரவு

பணவீக்க தரவு

அமெரிக்காவின் பணவீக்க தரவானது எதிர்பார்த்ததை போலவே அதிகரித்துள்ள நிலையில், இது மீண்டும் வட்டி அதிகரிப்பு கட்டாயம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. நுகர்வோர் விலை குறியீடானது 8.3% ஆக ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 8.5% ஆகவும், ஜுன் மாதத்தில் 9.1% ஆகவும் இருந்தது.

பத்திர சந்தை

பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையானது பணவீக்கத் தரவுக்கு பின்னர் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்திற்கு எதிராக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டாலரின் மதிப்பு 1% மேலாக அதிகரித்துள்ள நிலையில், இது வட்டி முதலீடுகளில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டும்.

குறைந்த விலை வாங்க தூண்டலாம்
 

குறைந்த விலை வாங்க தூண்டலாம்

எது எப்படியிருந்தாலும்,தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ள நிலையில், அது குறைந்த விலையில் பலரையும் வாங்க தூண்டலாம். இதற்கிடையில் சந்தையில் ஏற்பட்ட இந்த சரிவானது இன்று இப்படியே தொடருமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை நிச்சயம் அதிகரிக்கலாம். இது செப்டம்பர் 20 – 21 காலகட்டத்தில் நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இதன் காரணமாக இது மேற்கொண்டு டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தையில் ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம்.

பங்கு சந்தைகள் சரிவு

பங்கு சந்தைகள் சரிவு

அமெரிக்காவின் பணவீக்க தரவானது எதிர்பார்த்ததை போல அதிகரித்துள்ள நிலையில், இது பங்கு சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் அதன் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் வட்டி அதிகரிக்கும்பட்சத்தில் அது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 4.30 டாலர்கள் குறைந்து, 1713.10 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் ஒன்றாகவே உள்ளது. அதோடு கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 0.82% குறைந்து, 19.332 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 14th September 2022: gold prices expected to fall furthers

Gold prices are slightly lower in the COMEX market. Due to this, the price of gold in India is also expected to decrease.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.