பெஷாவர்:பாகிஸ்தானில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள பாரா பண்டாய் என்ற இடத்தில், நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு கபல் தேசில் என்ற பகுதியின் தலைவரும், அமைதிக் குழு உறுப்பினருமான இத்ரீஸ் கான் என்பவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் இத்ரீஸ் கான், இரண்டு போலீசார் உட்பட, ஐந்து பேர் உயிரிழந்தனர்.சம்பவ இடத்தில் நேற்று மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதலை கண்டித்த கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் மஹ்மூத் கான், ”இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்,” என்றார்.இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தெஹ்ரீக் தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மொஹம்மத் குரசானி, ”இத்ரீஸ் கான், பல ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவளித்து வந்ததால், அவர் கொல்லப்பட்டார்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement