ஏதென்ஸ்: கிரேக்க நாட்டில்(கிரீஸ்) சிகை அலங்காரம் செய்யும் நபர் ஒருவர் 47 விநாடிகளில் ஒருவருக்கு முடி திருத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பொதுவாக சிகை அலங்காரத்திற்கு நீண்ட நேரம் எடுக்கும். எவ்வளவு நேரம் எடுக்கிறதோ அவ்வளவு அழகாக முடி வெட்டப்படும். ஆனால் 47 விநாடிகளில் முடி திருத்தும் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோதான் பேசுபொருளாகியுள்ளது. முடி திருத்தம் செய்யப்பட்ட பின்னர் கின்னஸ் குழுவை சேர்ந்த ஒருவர் முடியின் அளவை பரிசோத்தித்து பார்த்தப் பின்னர் வெற்றியை அறிவிக்கிறார்.
சிகை அலங்காரம்
மனிதனுக்கு அதிகம் பொறுமை தேவைப்படும் இடங்களில் சலூன் கடையும் ஒன்று. நாம் எவ்வளவு பொறுமையாக இருக்கிறோமோ அவ்வளவு அழகாக சிகை அலங்காரம் செய்யப்படும். ஆனால் தற்போதைய காலகட்டங்களில் இந்த பொறுமைக்கு அவசியமில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. நவீன கருவிகள் இந்த சிகை திருத்தும் பணியை வேகமாக முடிக்க உதவியுள்ளது. மேலும், இந்த பணியில் புதிய டிசைன்களையும் இந்த கருவிகள் உருவாக்கியுள்ளன.
வெறும் 47 விநாடிகள்
ஆனால் என்னதான் இருந்தாலும் ஒரு அவசரத்திற்கு உடனடியாக நம்மால் முடியை அழகுபடுத்திட முடியாது. ஆனால் வெறும் 47 விநாடிகளில் உங்கள் சிகை அலங்காரத்தை திருத்த முடியும் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்தது உண்டா? அட ஆமாம் மக்களே கிரேக்க நாட்டை சேர்ந்த சிகையலங்கார நிபுணரான கான்ஸ்டான்டினோஸ் குடோபிஸ் சிகை அலங்காரத்தை வெறும் 47 விநாடிகளில் அதாவது ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் மாற்றம் செய்து அசத்தியுள்ளார்.
கின்னஸ் சாதனை
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரு டிரிம்மர் அப்புறம் ஒரு சீப்பு கொண்டு தலைவன் சிகையலங்கார நிபுணரான கான்ஸ்டான்டினோஸ் குடோபிஸ் முடியை அழகுபடுத்த தொடங்குகிறார். ஒரு 30 விநாடிக்குள் ஏறத்தாழ அனைத்தும் முடிந்துவிடுகிறது. பின்னர் அதிக முடிகளை வெட்டியெடுத்து முடியை ஒரே அளவில் சீரான நீளத்தில் கொண்டு வந்திருக்கிறார். இதையெல்லாம் 47.17 நொடிகளில் செய்து முடித்திருக்கிறார் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
உங்களுக்கும் அவசரமா?
இதனை அருகிலிருந்து கவனத்திக்கொண்டிருந்த கின்னஸ் குழுவினர், இந்த பணி முடிந்த உடன் வாடிக்கையாளரின் முடியின் அளவை அளவுகோல் கொண்டு பரிசோதித்துள்ளனர். முடி சீரான அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு கின்னஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்பாராத குடோபிஸ் பெருமகிழ்ச்சியடைந்துள்ளார். தன்னுடைய பணிக்கு கிடைத்த சிற்ப்பான அங்கீகாரம் என்றும் இந்த விருது குறித்து கூறியுள்ளார். என்ன மக்களே உங்களுக்கும் முடி திருத்த அவசரமா? அப்போது கிரீஸ்-க்கு ஒரு டிக்கெட் புக் பண்ணுங்க.