மறைந்த பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரிக்கும் கோகினூர் வைரம் பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சொந்தமானது என்று ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சமூக கலாச்சார கூட்டமைப்பு கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷாவை போரில் வென்றதன் நினைவாக, பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங், பூரி ஜெகநாதருக்கு கோகினூர் வைரத்தை நன்கொடையாக அளித்தார் என்றும் மகாராஜா ரஞ்சித்சிங்கின் மறைவுக்கு பிறகு அவரது மகன் துலிப்சிங்கிடம் இருந்து கோகினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் பறித்து சென்றதாக கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக தாங்கள் எழுதிய கடிதத்திற்கு 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பதில் கடிதம் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.