பெங்களூரு : பெங்களூரில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நகரை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ள மாநில அரசு, நகரின் நான்கு புறத்திலும் ‘சாட்டிலைட் டவுன்’ அமைக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்தியாவின் தகவல் தொழிநுட்ப துறைக்கு தலைநகராக பெங்களூரு திகழ்கிறது.
இதனால் வேலை தேடி, வெளி மாநிலத்தவர் இங்கு வருகை தருவது அதிகரித்து வருகிறது. பெங்களூரில் குடியேறுவதால், மக்கள் தொகை அதிகரிக்கிறது.வரும் 2040ல் பெங்களூரில் மக்கள் தொகை 3 முதல் 4 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெங்களூரு பரப்பளவை அதிகரிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதன்படி, பெங்களூரை சுற்றி நான்கு, ‘சாட்டிலைட் டவுன்’கள், ஆறு ஒருங்கிணைக்கப்பட்ட நகரமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, நகரில் இருந்து 40 கி.மீ.,யில் உள்ள தேவனஹள்ளி; பெங்களூரு ரூரல் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள நெலமங்களா டவுன்; சர்வதேச நிறுவனங்கள் அமைந்தள்ள தொழில் நகரமான தொட்டபல்லாபூர் ஆகிய இடங்களில், ‘சாட்டிலைட் டவுன்’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நான்காவது ‘சாட்டிலைட் டவுன்’ அமைக்கும் நகரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.தேவனஹள்ளி, சிக்கபானவரா, எலஹங்கா, பைப்பனஹள்ளி, ராஜனுகுண்டே, கெங்கேரி, ஒயிட் பீல்டு போன்ற இடங்களில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவே, இந்த சாட்டிலைட் டவுன் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பொம்மை ஆலோசனை நடத்தி வருகிறார்.பெங்களூருக்கு செல்ல ‘சாட்டிலைட் டவுன்’ என்ற திட்டத்தின் மூலம், ரயில், சாலை, ஹை – டெக் பயண அமைப்புகள் மற்றும் பயணியருக்கு எளிதான போக்குவரத்து வசதிகள் செய்யப்படும். இந்த நான்கு நகரங்களுக்கும் இடையில், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தொழில்கள் துவங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
நகராட்சி’
‘சாட்டிலைட் டவுன்’ என்பது மினி- நகராட்சி போன்ற நகர்ப்புற அமைப்பாகும். அவை ஒரு பெருநகரப் பகுதியின் மையமான ஒரு முக்கிய நகரத்திற்கு அருகில் இருக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement