மகாராணியாரின் சவப்பெட்டி, ஸ்காட்லாந்திலுள்ள தேவாலயம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது வானிலிருந்து ஒரு ஒளிக்கற்றை சரியாக மகாராணியாரின் சவப்பெட்டி மீது விழ, அது தெய்வீக செயல் என்று கூறி மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது.
இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது.
Image: Georgie Gillard / Story Picture Agency
மகாராணியாரின் சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles’ தேவாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
தற்போதைய மன்னரான சார்லஸ் அந்த பெட்டியின் பின்னால் நடந்துவருவோரை முன் நடத்திச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, திடீரென வானிலிருந்து ஒரு ஒளிக்கற்றை சரியாக மகாராணியாரின் சவப்பெட்டி மீது விழுந்தது.
அந்த காட்சியைக் கண்ட மக்கள், இது தெய்வீக செயல் என நெகிழ்கிறார்கள்.
Image: PA