மகாராஷ்டிராவில் புதிய தொழிற்சாலை.. தமிழ்நாட்டுக்கு வராம போய்விட்டதே..?!

இந்திய பொருளாதாரம் சேவை துறையை அதிகம் சார்ந்திருக்கும் நிலையில், சீனா-வை போல் இந்தியாவும் உற்பத்தித் துறையிலும் அதிகப்படியான ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்பதற்காக மேக் இன் இந்தியா திட்டம், PLI திட்டம் உட்படப் பல சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

இதேபோல் பல காரணங்களுக்காகச் சீனா-வில் இருந்து பல துறைகளை இருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா வந்து உற்பத்தி தளத்தை அமைக்க ஆர்வம் காட்டி வருகிறது.

இதேவேளையில் வெளிநாட்டில் இருந்து வரும் பெரிய நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுவனங்களும் உற்பத்தி துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.

இந்த வரிசையில் டாடா, ரிலையன்ஸ், அதானி குழுமங்கள் ஏற்கனவே நுழைந்த நிலையில் தற்போது அனில் அம்பானியின் வேதாந்தா குழுமம் தீவிரமாக இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் முடிவு இந்தியாவுக்கு நெருக்கடி தான்.. என்ன நடக்கும்..?

வேதாந்தா குழுமம்

வேதாந்தா குழுமம்

அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் இந்தியாவிலேயே மிகவும் பிரம்மாண்டமான செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை 20 பில்லியன் டாலர் முதலீட்டில் அமைக்க முடிவு செய்து இதற்காக 1000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்ற உள்ளது.

வேதாந்தா குழுமம்

வேதாந்தா குழுமம்

இந்த நிலையில் அடுத்ததாக அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்வதற்காகப் புதிய உற்பத்தி தளத்தை மகாராஷ்டிரா-வில் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அனில் அகர்வால் மகாராஷ்டிரா-வில் ஆப்பிள் ஐபோன் முதல் டிவி உபகரணங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளதாக அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா
 

மகாராஷ்டிரா

இது மட்டும் அல்லாமல் சுரங்க தொழில்துறையில் இருக்கும் அனில் அகர்வால் விரைவில் எலக்ட்ரிக் வாகன பிரிவிலும் இறங்குவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் பெரிய அளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் அனில் அகர்வால் இத்துறையிலும் இறங்க உள்ளார்.

டாடா குரூப்

டாடா குரூப்

ஏற்கனவே இந்தியாவில் டாடா குரூப் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கத் தைவான் நாட்டின் விஸ்திரான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

இதன் மூலம் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களைப் பிற தென் கிழக்கு நாடுகளுக்குச் செல்ல விடாமல் இந்தியா கைப்பற்ற முயற்சி செய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Anil Agarwal Targetting Maharashtra After Gujarat; Plans to set up iPhone manufacturing hub

Anil Agarwal Targetting Maharashtra After Gujarat for setting up iPhone manufacturing hub. Tamilnadu missed biggest opportunity again.

Story first published: Wednesday, September 14, 2022, 16:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.